26/11: ஹெட்லி மீது அமெரிக்க கோர்ட்டில் குற்றச்சாட்டுப் பதிவு

மும்பைத் தாக்குதல் தொடர்பான சதித் திட்டத்தில் தொடர்புடையவராக ஹெட்லி குறித்த குற்றச்சாட்டில் எப்.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிகாகோவில் உள்ள பெடரல் கோர்ட்டில் இந்த குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது. மும்பையில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கான இடங்கள் குறித்த விரிவான ஆய்வை மேற்கொண்டு சதித் திட்டத்திற்கு உடந்தையாக ஹெட்லி இருந்தார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி நடந்த தாக்குதலுக்கு முன்பு, கிட்டத்தட் 2 ஆண்டுகள் இந்த ஆய்வை அவர் மேற்கொண்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 12 குற்றச்சாட்டுக்கள் ஹெட்லி மீது சுமத்தப்பட்டுள்ளன.
இந்தியா, டென்மார்க்கில் குண்டு வைக்க சதி செய்தது, இந்தியா, டென்மார்க்கில் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியது, வெளிநாட்டு தீவிரவாத இயக்கங்களின் சதிச் செயலுக்கு உதவியது, லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கு தகவல்கள் கொடுத்து உதவி செய்தது ஆகிய ஆறு குற்றச்சாட்டுகளும், இந்தியாவில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு எதிராக கொலை மற்றும் சதிச் செயலில் ஈடுபட உதவியது உள்ளிட்ட ஆறு குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
ஹெட்லி பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் இ தொய்பா தீவிரவாத பயிற்சி முகாம்களில் பங்கேற்றவர் என்றும் எப்.பி.ஐ தனது குற்றச்சாட்டில் தெரிவித்துள்ளது. கடந்த பத்து வருடங்களாக இவர் அதில் கலந்து கொணடு வருவதாகவும், அந்த அமைப்பினருடன் இணைந்து இந்தியா, டென்மார்க்கில் சதி வேலைகளை நிகழ்த்த சதி வேலைகளைச் செய்து வந்ததாகவும் குற்றச்சாட்டுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல பாகிஸ்தான் ராணுவத்தில் மேஜராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற அப்துல் ரஹ்மான் ஹஷீம் சையத் என்பவர் மீதும் குற்றச்சாட்ட்பட்டுள்ளது. இவர் முகம்மது நபியின் கார்ட்டூனை வெளியிட்ட டென்மார்க் நாளிதழ் அலுவலகத்தைத் தாக்க திட்டம் தீட்டியதாக கூறப்பட்டுள்ளது.
டென்மார்க் அலுவலகத்தை எப்படித் தாக்கலாம் என்பது குறித்தும், தாக்குதல் நடத்த குறி வைக்கப்பட்ட இடம் குறித்த தகவல்களையும், லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த ஒருவர் மற்றும் இலியாஸ் காஷ்மீரி ஆகியோருடன் சேர்ந்து மேற்கொண்டதாக இவர் மீதான குற்றச்சாட்டு கூறுகிறது.
ஹெட்லியும், பாகிஸ்தானிய கனடியரான தஹவூர் ராணாவும் கடந்த மாதம் சிகாகோ விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
ஆயுள் அல்லது மரண தண்டனை கிடைக்கும்...
ஹெட்லி மீதான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவருக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை ஆகிய இரண்டில் ஒன்று நிச்சயமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்க நாட்டின் சட்டப்படி தீவிரவாதத்தில் ஈடுபடுவது அல்லது தீவிரவாத சதிக்கு உடந்தையாக இருப்பது ஆகிய இரண்டுமே மிகப் பெரிய தண்டனைக்குரிய குற்றங்களாகும்.
தற்போது ஹெட்லி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் மிகவும் கடுமையானவை. இதை வைத்துப் பார்க்கும்போது அவருக்கு குறைந்தது ஆயுள் தண்டனை அல்லது அதிகபட்சம் மரண தண்டனை கிடைக்கும் எனத் தெரிகிறது.
மேலும், சதித் திட்டத்திற்கு ஆவணங்கள், தகவல்கள் உள்ளிட்டவற்றை அளித்து உதவியதற்கு மட்டும் அவருக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்குமாம்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications