மும்பை தாக்குதல்: பாக. ராணுவ அதிகாரிக்கு தொடர்பு- யுஎஸ்
டெல்லி: மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக சிக்கியுள்ள பயங்கரவாதி ஹெட்லி மற்றும் பல்வேறு தீவிரவாத அமைப்புகளோடு, பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ அதிகாரிக்கு உள்ள தொடர்பை ஆதாரங்களுடன் எஃப்.பி.ஐ அம்பலப்படுத்தியுள்ளது.
26/11 மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதிகள் ஹெட்லி மற்றும் ராணா அமெரிக்காவில் கைது செய்யப்பட்டனர். தாக்குதல் சம்பவத்தில் இருவருக்கும் தொடர்பு உள்ளது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், ஹெட்லி-ராணாவுக்கு எதிராக அமெரிக்க புலனாய்வுத் துறை தயாரித்துள்ள குற்றப்பத்திரிகையில், பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ அதிகாரியின் பெயரும் இடம் பெற்றுள்ளது. லாகூரைச் சேர்ந்த ஒய்வுபெற்ற மேஜர் அப்துல் ரஹ்மான் ஹாசிம் சயிது (எ) பாஷா பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றியவர்.
ஹெட்லி மற்றும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளுடன் சேர்ந்து தாக்குதல் மற்றும் சதி திட்டத்தில் ஈடுபட்டதாக இவர் மீது சிகாகோ கோர்ட்டில் எஃப்.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள மிக பயங்கரஸ சக்தி வாய்ந்த தீவிரவாதியாக கருதப்படும் ஹூஜி தலைவர் இலியாஸ் கஷ்மீரி, லஷ்கர் இ தொய்பா ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டிருந்தாக மேஜர் சயிது மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பை தீவிரவாத தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஹெட்லிக்கு இந்த சயிதுடன் முக்கிய தொடர்பு இருப்பதையும் எஃப்.பி.ஐ குற்றப்பத்திறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக டென்மார்க் மற்றும் அமெரிக்காவின் வெளியே சில இடங்களில் தீவிரவாத சதிச் செயலுக்காக குற்றம்சாட்டப்பட்டுள்ள சயிது, பல்வேறு சதித் திட்டங்களுக்கும் ஹெட்லிக்கு உடந்தையாக செயல்பட்டிருப்பதாக எஃப்.பி.ஐ தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கும் ஹெட்லிக்கும் இடையே பாலமாக இவர் இருந்துள்ளார். ஹெட்லி பாகிஸ்தான் சென்றபோது, தீவிரவாத அமைப்புகளுடன் சந்திப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்.
மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்துடன் இவருக்கு உள்ள தொடர்பு குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
இவர்களின் தொலைபேசி மற்றும் இ-மெயில் உரையாடல்களின் பதிவையும் எஃப்.பி.ஐ ஆதாரமாக வைத்துள்ளது. இப்படிப்பட்ட அந்த மாஜி ராணுவ அதிகாரியை பாகிஸ்தான் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்து பின்னர் விடுவி்த்தது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications