செம்மொழி மாநாடு - அனைத்துக் கட்சி ஆலோசனைக் குழு அமைப்பு

Subscribe to Oneindia Tamil

All party committee for World classical Tamil summit constituted, செம்மொழி மாநாடு- அனைத்துக் கட்சிக் குழு அமைப்பு

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு, அனைத்துக் கட்சி ஆலோசனைக் குழு, கருணாநிதி, world classical tamil conference, all party advisory committee, karunanidhi.

செம்மொழி மாநாடு- அனைத்துக் கட்சிக் குழு அமைப்பு

செம்மொழி மாநாடு - அனைத்துக் கட்சி ஆலோசனைக் குழு அமைப்பு

சென்னை: கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கான அனைத்துக் கட்சி ஆலோசனைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

கோவை மாநகரில் 2010-ம் ஆண்டு ஜுன் மாதம் 23-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டினை மிகச் சிறப்பாகவும் சீரிய முறையிலும் நடத்துவதற்குத் தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

இம்மாநாட்டிற்கான பல்வேறு ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதற்காக ஏற்கனவே மாநாட்டுத் தலைமைக் குழு, ஆய்வரங்க அமைப்புக் குழு, சிறப்பு மலர்க் குழு, தமிழ் இணைய மாநாட்டுக் குழு மற்றும் மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு ஆகிய குழுக்களை அமைத்து முதல்-அமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார். இக்குழுக்கள் தங்களுடைய பணிகளைத் தொடங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இம்மாநாட்டினை வெற்றிகரமாக நடத்துவதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளைப் பெறும் வகையில் முதல்-அமைச்சர் கருணாநிதி, தமிழகச் சட்டமன்றக் கட்சித் தலைவர்களிடம், ஒத்துழைப்புத் தருமாறு கோரி கடிதம் அனுப்பினார்கள்.

அதன் அடிப்படையில் பதில் தெரிவித்துள்ள சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் மற்றும் பிற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய ஆலோசனைக் குழுவை அமைத்து தற்போது அறிவித்துள்ளார்.

அக்குழுவின் விவரம் பின்வருமாறு:

தலைவர்- முதல்-அமைச்சர் கருணாநிதி

உறுப்பினர்கள்- நிதி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன், சபாநாயகர் இரா.ஆவுடையப்பன், இந்திய தேசிய காங்கிரஸ்-கே.வி.தங்கபாலு, திராவிடர் கழகம்-கி. வீரமணி, எம்.ஜி.ஆர். கழகம் -ஆர்.எம்.வீரப்பன், பா.ம.க.- கோ.க.மணி.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-என்.வரதராஜன், இந்திய கம்யூனிஸ்டு - வை.சிவபுண்ணியம், பாரதிய ஜனதா -இல.கணேசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்- காதர் மொய்தீன், விடுதலைச் சிறுத்தைகள்- தொல். திருமாவளவன், மூவேந்தர் முன்னேற்றக் கழகம்- ஸ்ரீதர் வாண்டையார்.

புரட்சி பாரதம் - பூவை ஜெகன் மூர்த்தி, கொங்கு முன்னேற்றக் கழகம் - பெஸ்ட் ராமசாமி.

தலைமைச் செயலர்- கே.எஸ்.ஸ்ரீபதி.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தனி அலுவலர்- கா.அலாவுதீன்.

மத்திய அரசு தமிழ் மொழியின் சிறப்பினையும், தொன்மையையும் போற்றும் வகையில் அதனைச் செம்மொழியாக அறிவித்த பிறகு நடைபெறுகின்ற உலக அளவிலான முதல் மாநாடு என்பதால், இதனை மிகச் சிறப்பாகவும், சீரிய முறையிலும், செம்மொழித் தமிழுக்கு மேலும் சிறப்புச் சேர்க்கின்ற வகையிலும் நடத்த வேண்டும் என்பதற்காக இந்த ஆலோசனைக் குழுவின் மூலம் பல்வேறு அரசியல் கட்சிகளின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பெற்று தக்க மேல் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+