அஜ்மல் கசாப் வக்கீலுக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பையில் பொதுமக்கள் மீது வெறித்தாக்குதல் நடத்திய சம்பவத்தில் பிடிபட்ட தீவிரவாதி அஜ்மல் கசாபின் புதிய வக்கீலுக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் தீவிரவாதி கசாப் தரப்பில் வாதாட நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் அப்பாஸ் கஸ்மி மாற்றப்பட்டு புதிதாக கே.பி.பவார் நியமிக்கப்பட்டார்.
இவருக்கு தற்போது இஸட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் நான்குபேர் மற்றும் ஒரு போலீஸ் ஜீப் இவரின் பாதுகாப்புக்காக இருப்பார்கள்.
இவ்வழக்கின் அரசு தரப்பு வக்கீல் உஜ்வால் நிகாம் மற்றும் நீதிபதி எம்.எல்.தஹிலியானி ஆகியோருக்கும் இதே போல இஸட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications