தீவிரவாதிகளின் பாசறையாக மாறி விட்டது பாக்.: ஹிலாரி கிளின்டன்
வாஷிங்டன்: தீவிரவாதிகளுக்கு வழங்கப்படும் பயிற்சிகளும், ஆலோசனை, உத்தரவு எல்லாம் பாகிஸ்தானில் இருந்து தான் வருகின்றன என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் கூறியுள்ளார்.
தீவிரவாத தாக்குதல் சதி திட்டம் தொடர்பாக அமெரிக்காவில் ஹெட்லி, ராணா ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் வாஷிங்டனில் ஹிலாரி நிருபர்களிடம் கூறுகையில்,
அப்பாவிகளை கொல்லும் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்து தான் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. சதி திட்டங்கள் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் என்ன செய்யவேண்டும் என்ற கட்டளைகள் எல்லாமுமே இங்கிருந்து தான் வழங்கப்படுகின்றன.
இதை எண்ணிப்பார்க்கும் போது மிகவும் கவலையாக இருக்கிறது. இதுபோன்ற பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இடமளிக்கும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுடன் நாம் இன்னும் நெருக்கமாக இணைந்து தீவிரவாத கட்டமைப்புகளை வேரறுக்க வேண்டும்' என்றார்.
பாகிஸ்தானில் 5 அமெரிக்க முஸ்லீம்கள் கைது...
இதற்கிடையே, பாகிஸ்தானில் ஐந்து இளம் அமெரிக்க முஸ்லீ்ம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஜெய்ஸ் இ முகம்மது அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் பஞ்சாப் நெடுஞ்சாலைத் துறை ஊழியர் ஒருவரும் கைதாகியுள்ளார்.
சர்கோதா என்ற இடத்தில் உள்ள ஒரு சொகுசு பங்களாவில் வைத்து அனைவரும் கைதாகினர். இந்த பங்களா ஜெய்ஸ் இ முகம்மது அமைப்பின் தலைவர் ஒருவருக்குச்
சொந்தமானது.
கைதானவர்களிடமிருந்து லேப்டாப் கம்ப்யூட்டர்கள், சிடிக்கள், ஜிஹாதி இலக்கிய நூல்கள், முக்கிய இடங்களின் வரைபடங்கள் பறிமுதல் செய்யபப்ட்டுள்ளன.
இவர்கள் தீவிரவாத சதித் திட்டத்துடன் இருந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications