பைக்கில் சென்றவர்களிடம் நூதன முறையில் ரூ.8லட்சம் வழிப்பறி
சென்னை: பைக்கில் சென்ற இருவரிடம் நூதன முறையில் ரூ.8 லட்சம் வழிப்பறி செய்த மர்ம கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரம்பூரைச் சேர்ந்தவர்கள் ராஜசேகர், சுந்தர மூர்த்தி. இவர்கள் இருவரும் தனியார் பால் நிறுவனத்தில் ஏஜெண்டுகளாக உள்ளனர். பணி நிமித்தமாக இருவரும் ஒரே பைக்கில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் வைத்திருந்த சூட்கேசில் ரூ. 8 லட்சம் பணம் இருந்தது.
ராஜமங்கலம் தில்லை நகர் அருகே தெருவில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த மோட்டார்சைக்கிள், இவர்கள் மீது மோதியது.
இதில் ராஜசேகர், சுந்தர மூர்த்தி இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.
அப்போது மோதிய மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேர் இறங்கி, கண் இமைக்கும் நேரத்தில் ரூ. 8 லட்சம் இருந்த பணப்பெட்டியை பறித்துக்கொண்டு அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளிலேயே தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து ராஜசேகர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடிவருகிறார்கள்.












Click it and Unblock the Notifications