'தனி ராயலசீமா மாநிலம் வேண்டும்!-வேலூர், திருவள்ளூரை சேர்க்க வேண்டும்'!!

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டால் திருப்பதியை தலைமையிடமாகக் கொண்டு ராயசீமாவையும் தனி மாநிலமாக்க வேண்டும். அதில் தமிழகத்தில் உள்ள வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களையும் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சித்தூர் மாவட்ட அரசு ஊழியர் சங்கத்தினர், அரசு ஆசிரியர் சங்கத்தினர், மாணவ-மாணவிகள் ஆயிரக்கணக்கில் பங்கேற்ற கண்டன ஊர்வலம் நடந்தது.

அதில் பேசிய அரசு ஊழியர்-ஆசிரியர் சங்க நிர்வாகிகள், தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படுவதை கடுமையாக எதிர்ப்போம். அப்படி தனி மாநிலம் உருவாக்கப்பட்டால் ராயலசீமா பகுதி மாவட்டங்களை ஒருங்கிணத்து திருப்பதியை தலைமையிடமாகக் கொண்டு இன்னொரு மாநிலத்தையும் உருவாக்க வேண்டும்.

அதில், சித்தூர் உள்பட 4 மாவட்டங்களையும் கர்நாடகாவில் உள்ள கோலார், பெல்லாரி, மற்றும் தமிழகத்தில் உள்ள வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களையும் இணைக்க வேண்டும் என்றனர்.

13 நாட்களுக்குப் பின் சந்திரசேகர ராவ் டிஸ்சார்ஜ்:

இந் நிலையில் ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கக் கோரி உண்ணாவிரதம் இருந்து வந்த தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் 13 நாட்களுக்குப் பின் இன்று ஹைதராபாத் நிஜாம் இன்ஸ்டியூட் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

அவர் 11 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அவரது டிஸ்சார்ஜை ஒட்டி ஆயிரக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனை முன் திரண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+