சட்டம், திட்டம்- 'பன்ச் டயலாக்' பேசும் ஜி.கே.வாசன்
திருவண்ணாமலை: அதிமுக சட்டங்களை வைத்து ஆட்சி நடத்தியது. ஆனால், காங்கிரஸ்-திமுக நல்ல திட்டங்களை வைத்து ஆட்சி நடத்துகிறது என்று மத்திய அமைச்சர் வாசன் பேசினார்.
வந்தவாசி சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் கமலக்கண்ணனை ஆதரித்து மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தார்.
அவர் பேசுகையில், மத்தியில் மன்மோகன் தலைமையிலும், தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலும் நல்லாட்சி நடக்கிறது. இந்த இரு அரசுகள் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி மக்கள் வாழ்க்கையை மேம்படுத்துகின்றன.
கடந்த நான்கு மாதம் முன்பு நடந்த இடைத்தேர்தலில் ஜனநாயகம் இல்லை என்று கூறி அதிமுக போட்டியிடாமல் ஒதுங்கியது. ஆனால் இப்போது வலிய வந்து போட்டியிடுகிறார்கள்.
இனியும் ஒதுங்கியிருந்தால் மக்கள் நம்மை புறக்கணித்துவிடுவர் என்ற பயத்தில் தான் தற்போது இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். அவர்களை பொதுமக்கள் தங்கள் ஓட்டுகள் மூலம் புறக்கணிக்க வேண்டும்.
எஸ்மா, டெஸ்மா, சட்டங்கள் மூலம் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியவர் ஜெயலலிதா. நெசவாளர்களை கஞ்சி தொட்டியை நாடும் நிலைக்கு ஆளாக்கியவர் ஜெயலலிதா.
அதிமுக சட்டங்களை முன் வைத்து ஆட்சி நடத்தியது. ஆனால், காங்கிரஸ்-திமுகநல்ல திட்டங்களை முன் வைத்து ஆட்சி நடத்துகிறது என்றார்.
-
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications