செம்மொழி மாநாடு-மேலும் 4 குழுக்கள் அமைப்பு
சென்னை: கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக மேலும் நான்கு குழுக்களை அமைத்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அரசு வெளியிடட்டுள்ள செய்திக்குறிப்பு:
உலகத்தமிழ் செம்மொழி மாநாடு, கோவையில் 2010ம் ஆண்டு ஜுன் மாதம் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெறவுள்ளதையொட்டி அதற்கான பல்வேறு ஆயத்த பணிகளை சிறந்த முறையில் திட்டமிட்டு செயல்படுத்துவதற்காக மாநாட்டுத் தலைமைக் குழு மற்றும் ஆலோசனைக் குழு உள்ளிட்ட எட்டுக் குழுக்கள் முதல்வர் கருணாநிதியின் உத்தரவின் பேரில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றை தொடர்ந்து, மாநாடு தொடர்பான பல்வேறு பணிகளை துரிதமாக செயல்படுத்தவும், மாநாட்டினை மிகச்சிறப்பாக நடத்திடவும் பின்வரும் நான்கு கூடுதல் குழுக்களை முதல்வர் அமைத்துள்ளார்.
பொது அரங்க நிகழ்ச்சிகள் அமைப்புக்குழு:
தலைவர்- உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, துணைத் தலைவர்கள்- மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், குமரி அனந்தன், முனைவர் அவ்வை நடராசன், கவிஞர்கள் அப்துல் ரஹ்மான், வா.மு. சேதுராமன், வாலி, வைரமுத்து, பேராசிரியர் சுப. வீரபாண்டியன், ஒருங்கிணைப்பாளர்- முன்னாள் அமைச்சர் செ. அரங்கநாயகம், உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர் கணேசன், உறுப்பினர்கள்- நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ். அழகிரி, அரசு செயலாளர்கள் வெ.இறையன்பு, க. முத்துசாமி, துணைவேந்தர் சபாபதி மோகன், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் கூ.வ. எழிலரசு.
விருந்தோம்பல் குழு-பொள்ளாச்சி நா.மகாலிங்கம்..
தலைவர்- உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு, துணைத்தலைவர்கள்- முன்னாள் மத்திய மந்திரி மு. கண்ணப்பன், பொள்ளாச்சி நா.மகாலிங்கம், பேரூர் சாந்தலிங்க அடிகளார், ஒருங்கிணைப்பாளர்கள்- சட்டமன்ற உறுப்பினர் கோவை தங்கம், முதன்மைச் செயலாளர் க.சண்முகம், உறுப்பினர்கள்- சட்டமன்ற உறுப்பினர் பத்மாவதி, சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வப்பெருந்தகை, பண்ணாரி அம்மன் குழுமம் எஸ்.வி.பாலசுப்பிரமணியன், நந்தினி ரங்கசாமி, ரவிசாம், உணவு வழங்கல் துறை ஆணையர் ராஜாராமன், மேலாண்மை இயக்குனர் ஆ.சித்தரஞ்சன் மோகன்தாஸ், கோவை கலெக்டர் பு.உமாநாத், கோவை துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) நாகராஜன், பி.எஸ்.ஜி. கல்வி அறக்கட்டளை சுவாமிநாதன், காருண்யா பல்கலைக்கழக வேந்தர் முனைவர் பால் தினகரன், மாநில ஹோட்டல்/உணவு விடுதிகள் சங்க பொருளாளர் சீனிவாசன்.
கண்காட்சி அமைப்புக்குழு
தலைவர்-பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, துணைத் தலைவர்கள்- வனத்துறை அமைச்சர் என். செல்வராஜ், முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் டி. யசோதா, சென்னை கணபதி ஸ்தபதி, அரசு தொல்லியல் துறை இயக்குநர் (ஓய்வு) நாகசாமி, ஒருங்கிணைப்பாளர்கள்- நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தி ஸ்டான்லி, கவிஞர் பா. விஜய், தமிழச்சி தங்கபாண்டியன், தொல்லியல் துறை ஆணையர் டாக்டர் தி.ஸ்ரீ.ஸ்ரீதர், உறுப்பினர்கள்- மத்திய தொல்லியல் துறை சத்தியபாமா, புதுச்சேரி மத்தியப் பல்கலைக் கழகம் கா.ராசன், தஞ்சை ரத்தினகிரி, சென்னை கவிதா பதிப்பகம் சொக்கலிங்கம், சென்னை (விஜயா பதிப்பகம்) வேலாயுதம், கோவை மா. உமாபதி.
கலை நிகழ்ச்சிகள் மற்றும் சுற்றுலாக் குழு
தலைவர்- சுற்றுலாத்துறை அமைச்சர் என். சுரேஷ்ராஜன், துணைத்தலைவர்கள்- பிற்பட்டோர் நலன் மற்றும் கைத்தறி துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் ஆ. தமிழரசி, நடிகர் சிவக்குமார், ஒருங்கிணைப்பாளர்கள்- சட்டமன்ற உறுப்பினர் கே. பாலபாரதி, சட்டமன்ற உறுப்பினர் பெ. கமலாம்பாள், ஜோன்ஸ் ரூசோ, கவிஞர் சல்மா என்கிற ரொக்கையா, கலை மற்றும் பண்பாட்டுத் துறை ஆணையர் ப.அ. மணி, உறுப்பினர்கள்- சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை செயலர் வெ. இறையன்பு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக மேலாண் இயக்குனர் ஆ.சித்தரஞ்சன் மோகன்தாஸ், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (கோவை) ஜி. பால்ராஜ், தமிழ் மையம் சென்னை தந்தை வின்சென்ட் சின்னதுரை, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் கவிஞர் இளையபாரதி, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் மு.ராமசாமி, சென்னை திரைப்பட கல்லூரி, சென்னை, கூத்துப்பட்டறை நா. முத்துசாமி மற்றும் திருச்சி மார்கரெட் பாஸ்டின் கலைக்காவிரி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications