விமான சேவை அதிகரிக்க ஐக்கிய அரபு அமீரகம்-இலங்கை ஒப்பந்தம்

Subscribe to Oneindia Tamil

துபாய்: ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இலங்கை இடையே விமான போக்குவரத்தை அதிகரிப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.

இதன்படி எமிரேட்ஸ் ஏர்லைன், எடிஹாட் ஏர்வேஸ், ஏர் அரேபியா ஆகிய விமானங்களின் வாராந்திர சேவைகள் மேலும் அதிகரிக்கப்படும் என தெரிகிறது. ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் இலங்கைக்கு இடையே அதிகபட்சமாக வாரத்துக்கு 10 முறை இவை இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஃபிளை துபாய் குறைந்த பயணக் கட்டண விமானமும் இவற்றுடன் சேர்த்து சேவைகள் அதிகரிக்கப்படும்.

இலங்கை அரசு சுற்றுலா மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு பெருமளவு ஊக்கமளிக்க முன்வந்துள்ள நிலையில் இரு நாடுகளின் பரஸ்பரம் பயன் பெறும் புதிய திட்டங்களை வரையறுத்து இலங்கை அரசின் பரிசீலனைக்கு அனுப்பியுள்ளதாகவும் ஐக்கிய அரபு அமீரக விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+