வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்-சேவை கடும் பாதிப்பு
சென்னை: நாடு முழுவதும் இன்று வங்கி ஊழியர்கள் ஒருநாள் வேலைநிறுத்த்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவில் உள்ள 26 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து 5 அல்லது 6 வங்கிகளாக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. உலக அளவிலான போட்டிக்கு இந்திய வங்கிகளை தயார் செய்யும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஆனால், இதற்கு வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராகவும், ஸ்டேட் வங்கி இந்தூரை பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு ஊதிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்று ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் வங்கி ஊழியர்கள் குதித்துள்ளனர்.
அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் ஆகியவை ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் நாடு முழுவதும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அனைத்து மூடப்பட்டுள்ளன.
இவர்களோடு சில தனியார் வங்கி ஊழியர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வங்கிப் பணிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக நேற்று டெல்லியில் துணைத் தொழிலாளர் நல ஆணையர்முன்னிலையில் இந்திய வங்கி அதிகாரிகள்
சங்கத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் இந்திய வங்கி ஊழியர் சம்மேளன நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துவிட்டது.
தங்கள் கோரிக்கைக்கு மத்திய அரசு பணியாவட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications