தி்ருச்செந்தூர் தொகுதி - திமுக - அதிமுக உற்சாகம் - தேமுதிக சேர்வு
திருச்செந்தூர்: தொடர் வெற்றிகள் கொடுக்கும் தெம்பில் திமுகவும், தடைகளை தகர்த்து வெல்வோம் என்ற நம்பிக்கையில் அதிமுகவும் திருச்செந்தூரில் உற்சாகமாக உள்ளன. ஆனால், இந்த இருபெரும் கட்சிகளின் இமாலய நெருக்குதலில் சிக்கி தேமுதிகவினர் சோர்வுடன் காணப்படுகின்றனர்.
திருச்செந்தூர் தொகுதிக்கு வரும் 19 ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. திமுக சார்பில் அனிதா ராதாகிருஷ்ணனும், அதிமுக சார்பில் அம்மன் நாராயணனும், தேமுதிக சார்பில் கோமதி கண்ணனும் களத்தில் உள்ளனர்.
ஒரு முக்கியக் கட்சி சார்பில் வாக்களர்களை கவர் செய்ய பணம், வேட்டி, சட்டை, சேலை போன்றவகைள் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தேவைப்படும் நபர்களுக்கு செல் போன் ரீசார்ஜ் வவுச்சர்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
அதேசமயம், தொகுதியில் பல பகுதிகளில் அதிமுக வாக்களார்களுக்கு வழங்க வைத்த பணம் போலீசார் உதவியோடு ஆளும் கட்சி நிர்வாகம் பறிமுதல் செய்து வருவதால் அதிமுக கடும் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளது.
மறுபக்கம் தேமுதிக பண பலத்தை நம்பாமல் மக்களை மட்டும் நம்பி களத்தில் உள்ளது.
எப்படியும் அனிதா ராதாகிருஷ்ணனை தோற்கடித்தே ஆக வேண்டும் என்று அதிமுகவும், எப்படியும் அனிதா ராதாகிருஷ்ணனை வெற்றி வெற வைத்தே ஆக வேண்டும் என்று திமுகவும் முண்டாசு கட்டி வருகின்றது. இனால் அனிதா ராதாகிருண்னணை முன் வைத்தே திருச்செந்தூர் தொகுதி இடைத் தேர்தல் நடைபெறுகின்றது.
அதாவது அனிதாவா, அதிமுகவா என்ற கேள்வியே திருச்செந்தூர் தொகுதியில் பிரதானமாக முன்வைக்கப்பட்டுள்ளது.
அனிதா ராதாருகிருஷ்ணன் எம்எல்ஏ -வாக இருந்தபோதும் கூட, திருச்செந்தூர் பஸ் நிலையம் பணிகள் கடந்த பல வருடங்களாக ஆமை வேகத்தில் நடைபெறுகின்றது. பாதாள சாக்கடை திட்ட பணிகள் அடிக்கல் நாட்டு விழா கடந்த 7 வருடத்திற்கு முன்பு அமைச்சர் டி.ஆர்.பாலு அடிக்கல் நாட்டினார். ஆனால் அதற்கான பணிகள் இதுவரை நடைபெறவில்லை.
ஆனால் இந்து நாடாரான அனிதா ராதாகிருஷ்ணன் , கிரிஸ்துவ நாடார் மக்களுடனும் நல்ல இணக்கத்தில் உள்ளார். இதுதவிர திமுகவுக்கு முஸ்லீம் மக்கள் வாக்குகளும், அரசு ஊழியர்கள் வாக்கும் கைகொடுக்கும்.
திருச்செந்தூர் தொகுதியில் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் பல ஆயிரம் மீனவ மக்கள் வசித்து வருகின்றனர். மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் சட்டத்தை திமுகவால் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும் என்று கூறி அவர்களது ஓட்டை திமுக தட்டிப்பறிக்க முயற்சி செய்து வருகின்றது.
மறுபக்கம், இந்த முறை திமுகவுக்கு நீங்கள் வாக்களித்தால் உங்ளை யாரும் வந்து காப்பாற்ற மாட்டார்கள். ஈழ தமிழர்கள் விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்பதை நினைத்து பாருங்கள் என்று கூறி அதிமுக வாக்காளர்களை மிரள வைக்கின்றது.
தொகுதி முழுக்க ஒவ்வொரு வார்டிலும் வாக்காளர்களை கவர்ந்திழுக்க திமுக கடுமையாக முயன்று வருகிறது. இதன் காரணமாக தங்களை போலீஸாரை வைத்து நெருக்கி வருவதாக அதிமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இதில் காமெடியான விஷயம் தேர்தல் அலுவலர்களின் நிலைதான். ஒருவித பயத்துடன்தான் அவர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனராம். அதிமுகவினரை விட மிக பயந்த நிலையில் பணியாற்றி வருகின்றனர்.
போலீசாரும், திமுகவினரும் மட்டும் நெஞ்சை நிமிர்த்தி உலா வருகின்றனராம்.
இப்படி களேபரங்களுடன் கலகலப்பாக காணப்படும் திருச்செந்தூர் தொகுதி வாக்காளர்கள் நாளை மறு நாள் தங்களது விரல்களைப் பயன்படுத்தி இரு பெரும் வேட்பாளர்களின் விதியை நிர்ணயிக்க தயாராகி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications