மாவோயிஸ்ட் பந்த்- நேபாளத்தில் இயல்பு நிலை பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

காத்மாண்டு: அரசுக்கு எதிராக மாவோயிஸ்டுகள் அழைப்பு விடுத்துள்ள 3 நாள் பந்த் போராட்டத்தால் நேபாளத்தி்ல் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் 3 நாட்களுக்கு பந்த் நடத்த மாவோயிஸ்டுகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

முதல் நாளான இன்று காத்மாண்டு உள்ளிட்ட பல இடங்களிலும் கடைகள், கல்வி மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. காத்மாண்டுவில் வாகனங்களை மறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் 37 பேர் கைது செய்யப்பட்டனர்.

காலையில் காத்மாண்டு புறநகர் பகுதியில் வழக்கம் போல ஓடத் துவங்கிய சுமார் 16 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதையடுத்து பெரும்பாலான இடங்களில் அரசு மற்றும் தனியார் வாகனங்கள் இயங்கவில்லை.

மார்க்கெட்டுகள், தொழிற்கூடங்கள் மூடிக் கிடந்தன. சாலைகள் வாகனமின்றி வெறிச்சோடிக் கிடக்கின்றன. போஸீஸ் வாகனம், சுற்றுலா மற்றும் ஆம்புலன்ஸ் போன்றவை பலத்த பாதுகாப்புடன் செல்கின்றன.

பிரதமர் ராம் பரன் யாதவ் முந்தைய மாவோயிஸ்ட் அரசு ராணுவ தளபதியை நீக்க எடுத்த முடிவை திரும்பப் பெற்றதைக் கண்டித்து, அவர் பதவி விலகக் கோரி மாவோயிஸ்ட் கட்சியினர் இந்த பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+