தென்காசி: மர்ம காய்ச்சலால் கல்லூரி மாணவர் பலி
தென்காசி: தென்காசியில் மர்மகாய்ச்சலால் அவதிப்பட்டு வந்த கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
தென்காசி அருகேயுள்ள கீழப்புலியூரை சேர்ந்த செல்லசாமி மகன் சோமு. சுரண்டை அரசு கல்லூரியில் படித்து வந்தார்.
ஒரு வாரமாக காய்ச்சலால் அவதிப்பட்ட இவர், அதிகாலை திடீரென இறந்தார். இவர் படிக்கும் கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் கூறினர்.
மருந்து, மாத்திரை சாப்பிட்டாலும் கூட சில இடங்களில் நோய் முற்றி உயிர் பலியும் ஏற்படுவதாக செய்திகள் வருகின்றன. சமீபத்தில் மதுரை கல்லூரியில் தங்கி படித்து வந்த சாம்பவர் வடகரையை சேர்ந்த தங்கசாமி மகள் மாரிசெல்வம் என்பவர் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு திடீரென இறந்தார்.
இளம் வயதினர் இந்த மர்ம நோயால் பலியாவது பொதுமக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. தடுப்பு மருந்துகள் பயன்படுத்தினால் நோயின் பிடியில் இருந்து தப்பலாம் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications