கொலம்பிய கவர்னர் கடத்திக்கொலை
ஃபுளோரன்சியா: கொலம்பியாவின் ககுவேட்டா மாகாண கவர்னர் மர்மமான முறையில் கடத்திக் கொல்லப்பட்டார்.
கொலம்பியாவின் ககுவேட்டா மாகாண கவர்னர் லூயிஸ் பிரான்சிஸ்கோ கடந்த திங்கள் கிழமையன்று மர்ம நபர்களால் காரில் கடத்திச் செல்லப்பட்டார்.
அவரை உடனடியாக மீட்குமாறு போலீசாருக்கு கொலம்பியாவின் அதிபர் அல்வரோ உரிபே உத்தரவிட்டார். கொலம்பியாவின் புரட்சிகர ஆயுதப் படையினர் தான் கவர்னரை கடத்தியிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்பட்டது.
இந்நிலையில், ககுவேட்டா தலைநகர் ஃபுளோரன்சியா அருகே கவர்னர் கடத்திச்செல்லப்பட்ட கார் இருப்பதாகவும், அதில் ஒரு நபர் குண்டடி பட்டு இறந்து கிடப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கவுவேட்டாவின் இடைக்கால கவர்னரான ஒல்கா பேட்ரிகா வேகா, சுட்டுக்கொல்லப்பட்டது கவர்னர் தான் என்பதை உறுதி செய்தார்.
புரட்சிக் குழுவினர் தான் இதை செய்திருப்பார்கள என்று இடைக்கால கவர்னர் வேகா குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து விசாரணை துவங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications