இலங்கை ராணுவத்தினர் மிக ஒழுக்கமானவர்கள்- சொல்கிறார் வன்னி கமாண்டர்

இலங்கையில் உள்ள முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் பெண்களை அங்குள்ள பாதுகாப்பு படையினர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும், செக்ஸ் அனுபவிக்க சம்மதித்தால் தான் உணவு தரப்படும் என கொடுமைப்படுத்தியதாக முகாமில் இருந்த வெளியேறிய தமிழ் பெண் மருத்துவர் ஒருவர் லண்டனில் பேட்டி அளித்தார்.
சர்வதேச அளவில் பல்வேறு பத்திரிகைகள் மற்றும் டிவி செய்திகளும் இதை உறுதிப்படுத்தி செய்திகள் வெளியிட்டன. இந்நிலையில், இந்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை என வன்னிப் பகுதி ராணுவ கமாண்டர் கமல் குணரத்னே மறுப்பு கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறிகையில், 'முகாம்களில் பெண்களிடம் செக்ஸ் தொந்தரவு கொடுப்பது போன்ற எந்தவொரு சம்பவமும் நிகழவில்லை. அப்படி துன்புறுத்தப்பட்டால் அவர்கள் தாராளமாக புகார்கள் கொடுக்கட்டும்.
புகார் குறித்து நாங்கள் விசாரித்தும் பார்த்துவிட்டோம். அப்படி ஒன்றும் நடக்கவில்லை. எங்கள் ராணுவத்தினர் மிகவும் ஒழுக்கமானவர்கள். பல பேரின் உயிரை காப்பாற்றி, மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டவர்கள்' என்றார்.












Click it and Unblock the Notifications