குளச்சல்: மீன் பிடிக்கச் சென்ற 3 பேர் மாயம்

Subscribe to Oneindia Tamil

குளச்சல்: குளச்சல் அருகே கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 3 மீனவர்களைக் காணவில்லை. மீட்புப் படையினர் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

குளச்சல் அருகேயுள்ள கோடிமுனையை சேர்ந்த தேயுஸ், அந்தோணி பிள்ளை, சோபின் ஆகிய 3 மீனவர்கள் கடந்த 21ம் தேதி இரவு கட்டுமரங்களில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கரை திரும்பாததால், உறவினர்கள் தேடினர்.

மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசிடம் உறவினர்கள் புகார் கொடுத்தனர். உடனடியாக நடவடிக்கை எடுக்காத நிர்வாகத்தினர், உறவினரின் சாலை மறியலுக்கு பின்னர் ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

இந்திய கடலோர காவல்படை கப்பலும், உள்ளூரை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட வல்லம், கட்டுமரம், விசைப் படகுகளிலும் 3 மீனவர்களை தேடும் பணிகள் நடக்கின்றன.

ஹெலன் டேவிட்சன் எம்.பி, ஜெயபால் எம்.எல்.ஏ ஆகியோர் கோடி்முனைக்கு வந்து மாயமான 3 பேரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளனர். பங்குதந்தை ஜான்ரோசிடம் மீட்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+