பெரு பஸ் விபத்து- 40 பயணிகள் பலி

Subscribe to Oneindia Tamil

Peru
லிமா: பெரு நாட்டின் கஸ்கோ மாகாணத்தில் இன்று நடந்த பயங்கர விபத்தில் 40 பஸ் பயணிகள் பலியானார்கள்.

அந்தப் பேருந்து ஆண்டிஸ் மலைத் தொடர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது 200 அடிப் பள்ளத்தில் விழுந்தது. இதில் 40 பயணிகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். 10 பேர் காயமடைந்தனற்.

அரிகுபா என்ற இடத்திலிருந்து இந்தப் பேருந்து சான்டோ டோமாஸ் என்ற ஊருக்குப் போய்க் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்தது.

கன மழை காரணமாக சாலை ஈரமாக இருந்ததாலும், பஸ்சில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதாலும், அதி வேகமாக பஸ் போனதுமே விபத்துக்குக் காரணம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும் கிறிஸ்துமஸுக்காக மக்கள் அதிக அளவில் அந்தப் பேருந்தில் பயணம் செய்துள்ளனர்.

இதுபோன்ற சாலை விபத்துக்கள் பெரு நாட்டில் மிகச் சாதாரணம். குறிப்பாக ஆண்டிஸ் மலைத் தொடரில் அதிக அளவில் விபத்துக்கள் நடப்பது வழக்கம். பெரு நாட்டில் சாலைகள் மகா மோசமானவை, மேலும் பஸ்களும் அறுதப் பழசானவையாகும். இதை விட முக்கியமாக டிரைவர்கள் கவனக்குறைவாக பஸ்களை ஓட்டுவது அங்கு மிகச் சாதாரணம். இதுவே விபத்துகளுக்கு முக்கியக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+