திருப்பதிக்கு பஸ் போக்குவரத்து தொடங்கியது - ஹைதராபாத்துக்கு இல்லை
ஹைதராபாத்: தெலுங்கானா எதிர்ப்பு போராட்டத்தால் தமிழ்நாட்டில் இருந்து திருப்பதி, நெல்லூர், விஜயவாடா, கடப்பா, அனந்தபூர், சித்தூர், காளஹஸ்தி, நாயுடுபேட்டை ஆகிய ஊர்களுக்கு நிறுத்தப்பட்டிருந்த பஸ் போக்குவரத்து தற்போது வழக்கம் போல தொடங்கியுள்ளது.
தெலுங்கானாவை எதிர்த்து ஆந்திராவின் இதர பகுதிகளில் போராட்டம் நடந்து வந்ததால் மேற்கண்ட பகுதிகளுக்கு பஸ் போக்குவரத்து தடைபட்டிருந்தது.
இந்த நிலையில், திருப்பதியில் இருந்து நேற்று முன்தினம் ஆந்திர மாநில அரசு பஸ்கள் சென்னை கோயம்பேடு வந்தன. சென்னையில் இருந்து நகரி, புத்தூர் மற்றும் தடா, வரதப்பாளையம், காளஹஸ்தி வழியாக திருப்பதி செல்லும் பஸ்களும் இயக்கப்படுகின்றன.
ஆனால், கலவரக்களம் மீண்டும் ஹைதராபாத்திற்கு மாறியுள்ளதால் அப்பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.
அதேபோல் ஹைதராபாத் மற்றும் வாரங்கல் ரயில் நிலையங்களில் வன்முறை கும்பல் புகுந்ததால், அப்பகுதிகளில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. விஜயவாடா உட்பட 11 இடங்களில் ரயில்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. ஹவுரா-ஹைதராபாத் ஈஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் திருப்பதி-அடிலாபாத் எக்ஸ்பிரஸ் ஆகியவை ரத்து செய்யப்பட்டன.
சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் கச்சிக்குடா, ஹைதராபாத் எக்ஸ்பிரஸ் உள்பட அனைத்து ரயில்களிலும் பாதுகாப்பு அதிகரிப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் கூடுதல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
