நில மோசடி-திமுக பஞ்சாயத்து தலைவர் கைது
நெல்லை: சேரன்மகாதேவி அருகே நிலமோசடி செய்ததாக திமுகவைச் சேர்ந்த ஊராட்சி தலைவர் மற்றும் அவரது தம்பி ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேரன்மகாதேவி அருகே உள்ள பிள்ளைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திமுக கிளை செயலாளரும், திருவிட்டான்புள்ளி ஊராட்சி தலைவருமான பாலசுப்பிரமணியன் என்பவரது சகோதர்கள் முத்துகுமார், பாலையா ஆகியோரிடம் 10 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கினார்.
சமீபத்தில் அந்த இடத்தில் மகாலிங்கத்தின் மகன் வீடுகட்ட சென்றார். அப்போது பாலசுப்பிரமணியன், அவரது தம்பிகளுடன் வந்து, 'நீங்கள் விலைக்கு வாங்கியது வேறு இடம்' என்று ஒரு ஒதுக்குப்புறமான இடத்தை காட்டினார்.
இடத்தை விற்கும்போது நல்ல இடத்தை காட்டி விட்டு தற்போது வேறு இடம் என்று மோசடி செய்ததாக மகாலிங்கம் சேரன்மகாதேவி போலீசில் புகார் செய்தார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது பாலசுப்பிரமணியன் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன், அவரது தம்பி பாலையா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். முத்துகுமாரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications