வட கிழக்கு பருவமழை-11 மாவட்டங்களில் அதிகம் -5 மாவட்டங்களில் இயல்பை விட குறைவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த ஆண்டு வட கிழக்குப் பருவ மழை சீசனில் 11 மாவட்டங்களில் இயல்பை விட அதிக அளவில் மழை பெய்துள்ளது. 5 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாக பெய்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில்தான் மிக அதிக அளவிலான மழை பெய்துள்ளது.

வட கிழக்குப் பருவ மழைப் பொழிவு குறையத் தொடங்கியுள்ளது. நேற்று வரை பதிவான சராசரி மழையளவு 419.1 மில்லி மீட்டரை எட்டியுள்ளது.​ இது இயல்பான மழையளவை விட 15 சதவீதம் அதிகம்.

மாவட்ட வாரியாக கடந்த 83 நாள்களில் பெய்துள்ள மழையளவு,​​ அடைப்புக் குறிக்குள் இயல்பான மழையளவு ​(மி.மீ​):

நாகப்பட்டினம் 1,339.9 ​(846.1) ​
கடலூர் 959.1 ​(694.3)
திருவாரூர் 955.2 ​(632.5)
நீலகிரி 872.6 ​(359.3)
தஞ்சாவூர் 810.3 ​(525.6)
சென்னை 799.8 ​(725.1) ​
காஞ்சிபுரம் 757.1 ​(679.9)
விழுப்புரம் 659.1 ​(472.1)
திருநெல்வேலி 645.6 ​(411.4)
ராமநாதபுரம் 638.2 ​(486.8) ​
திருவள்ளூர் 589.9 ​(588.6)
அரியலூர் 584.6 ​(438.9) ​
தூத்துக்குடி 488.2 ​(398.3)
புதுக்கோட்டை 478.7 ​(404.2) ​
திண்டுக்கல் 467.3 ​(386.6)
கன்னியாகுமரி 451.0 ​(418.5)
சிவகங்கை 438.1 ​(399.4)
திருவண்ணாமலை 436.5 ​(431.9)
பெரம்பலூர் 435.3 ​(438.94) ​
திருச்சி 384.6 ​(346.9)
தேனி 379.1 ​(373.8)
கரூர் 343.5 ​(357.9)
விருதுநகர் 331.0 ​(420.0)
ஈரோடு 324.6 ​(317.7)
மதுரை 301.8 ​(360.9)
கோயம்புத்தூர் 297.7 ​(320.1)
தர்மபுரி 244.3 ​(311.8)
சேலம் 243.6 ​(342.7)
வேலூர் 238.8 ​(346.2)
கிருஷ்ணகிரி 231.9 ​(287.8)
நாமக்கல் 207.5 ​(287.5)
புதுச்சேரி 1,178.1 ​(846.7) ​

நீலகிரியில் மிக அதிகம்...

தமிழகத்திலேயே நீலகிரி மாவட்டத்தில்தான் இயல்பை விட மிக அதிக அளவிலான மழை பெய்துள்ளது. அங்கு இயல்பை விட கூடுதலாக 143 சதவீத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால்தான் பிற மாவட்டங்களை விட அங்கு மழைச் சேதம் அதிக அளவில் இருந்தது.

மேலும், அரியலூர்,​​ கடலூர்,​​ திண்டுக்கல்,​​ விழுப்புரம்,​​ நாகப்பட்டினம்,​​ ராமநாதபுரம்,​​ தஞ்சாவூர்,​​ திருவாரூர்,​​ தூத்துக்குடி,​​ திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் இயல்பான அளவை விட கூடுதலாக மழை பெய்துள்ளது.​

தர்மபுரி,​​ நாமக்கல்,​​ சேலம்,​​ வேலூர்,​​ விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களில் இயல்பான அளவை விட குறைவாகவே மழை பெய்துள்ளது.

பிற மாவட்டங்களில் இயல்பான மற்றும் இயல்பையொட்டிய மழை காணப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+