2010ல் ஐடி துறையில் காத்திருக்கும் 50,000 புதிய வேலைகள்!
பெங்களூர்: கிட்டத்தட்ட ஒன்றரை வருட இடைவெளிக்குப் பிறகு இந்திய ஐடி துறையில் ஆட்கள் தேவை அறிவிப்புகள் எட்டிப் பார்க்கத் துவங்கியுள்ளன.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புதிய வேலைவாய்ப்புகளுக்கான வாய்ப்புகள் மிகவும் மங்கிக் காணப்படும் இந்த சூழலிலும் இந்தியாவில் மட்டும் 50000 புதிய பணிகள் ஐடி துறையில் காத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
வருகிற 2010-ம் ஆண்டு இந்த பணிகளுக்கான நியமனங்கள் நடக்கும் என்கிறார் லீடர்ஷிப் கேபிடல் சிஇஓ மூர்த்தி.
"2007-ல்தான் இந்திய ஐடி துறை அதிகபட்சமாக 3 லட்சம் இளைஞர்களை பணியமர்த்தியது. அதற்கடுத்த ஆண்டு 1.8 லட்சம் இளைஞர்கள் எடுக்கப்பட்டனர். 2009-ல் வேலை நியமனங்களை விட வேலை இழப்புகள் அதிகமாக இருந்தன.
ஆனால் 2010-ல் அதிகளவு வேலைவாய்ப்புகள் ஐடி துறையில் காத்திருக்கிறது" என்கிறார் மூர்த்தி. முதல் காலாண்டில் சற்று குறைவான வாய்ப்புகள் வந்தாலும், இரண்டாம் காலாண்டில் அதிக அளவு பணியிடங்களுக்கு ஆட்கள் தேவைப்படுவார்கள்" என்கிறார் இவர்.
ஆட்அஸ்த்ரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நிருபமா, இப்படிச் சொல்கிறார்: "இதற்கு முந்தைய ஆண்டுகளில் காணப்பட்ட சுணக்க நிலையை விரட்டும் வகையில், சுனாமியாய் வரப் போகின்ற புதிய வேலை வாய்ப்புகள். இப்போதே பல நிறுவனங்கள் பெரிய அளவில் ஆளெடுப்புக்கு தயாராகி வருவதை நான் அறிவேன்" என்கிறார்.
"2010-ஐப் பொறுத்தவரை இந்திய இளைஞர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி மிக்க ஆண்டாக இருக்கும். ஆனால் எல்லோருக்கும் அல்ல... திறமையாளர்களுக்கு மட்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என்கிறார் சென்டியன்ட் கன்ஸல்டிங் சிஇஓ.
நல்லது நடந்தால் சரி!/ Virus Database: 270.14.119/2586 - Release Date: 12/25/09 09:33:00












Click it and Unblock the Notifications