பெண்களுடன் உல்லாசம்-ஆளுநர் பதவியிலிருந்து விலகினார் திவாரி

Subscribe to Oneindia Tamil

Tiwari
ஹைதராபாத்: விபச்சாரப் பெண்களுடன் உல்லாசமாக இருந்துது தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து ஆளுநர் பதவியிலிருந்து இன்று ராஜினாமா செய்தார் என்.டி.திவாரி.

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராதிகா என்பவர் அனுப்பி வைத்த விபச்சாரப் பெண்களுடன் உல்லாசமாக இருந்து கையும் களவுமாக சிக்கி அசிங்கப்பட்டார் திவாரி.

அவரது செயலால் நாடே அதிர்ந்தது. இந்த வயதில் இப்படி ஒரு அசிங்கமா என்று மக்கள் பதறினர். ஏற்கனவே தெலுங்கானா விவகாரத்தால் நொந்து போயுள்ள ஆந்திர மக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளானர்கள்.

செக்ஸ் ஊழலில் சிக்கி தவித்து வரும் என்.டி. திவாரியால் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பெரும் தலைவலி ஏற்ட்டது.

காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த தலைவர்களில் ஒருவர் திவாரி. ராஜீவ் காந்தி மரணத்திற்குப் பின்னர் பிரதமராக இவர் தான் நியமிக்கப்படுவார் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது. அந்த அளவுக்கு வட மாநிலங்களில் பிரபலமான தலைவர்களில் ஒருவராக இருந்தார். உ.பி. மாநிலத்தில் இவரது தலைமையில்தான் காங்கிரஸ் கட்சி ஏகப்பட்ட இடங்களில் தொடர்ந்து ஜெயித்து வந்தது.

இந்திய அரசியல் தலைவர்களில் 2 மாநிலங்களில் முதல்வராக இருந்த ஒரே நபர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு. ராஜீவ் அமைச்சரவையில் நிதி, வர்த்தகம், வெளியுறவுத்துறை என பல முக்கிய பொறுப்புகளையும் வகித்தார்.

கடந்த ஆண்டு அவர் ஆந்திரா கவர்னராக நியமிக்கப்பட்டார். வயதாகி விட்டதால் அவரால் சுறுசுறுப்பாக செயல்பட முடியவில்லை என்று பலரும் புகார் கூறினார்கள் என்றாலும் காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் அதை கண்டு கொள்ளாமல் திவாரியை கவர்னராக தொடர்ந்து நீடிக்க வைத்து அழகு பார்த்து வந்தனர்.

ஆனால் திவாரியின் மகா அசிங்கமான பக்கத்தை தோலுரித்துக் காட்டியது ஆந்திர ஜோதி டிவி. என்.டி.திவாரி மீது எழுந்துள்ள செக்ஸ் குற்றச்சாட்டுக்கள் காங்கிரஸ் மேலிட தலைவர்களை கடும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது.

எனவே கவர்னர் பதவியில் இருந்து உடனடியாக அவரை நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியாவை வற்புறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் ஆந்திர மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும், என்.டி.திவாரியை மாற்றுங்கள் என்று குரல் எழுப்பினர். தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, பிரஜா ராஜ்ஜியம் தலைவர் சிரஞ்சீவி மற்றும் இடதுசாரி கட்சித்தலைவர்கள் திவாரியை உடனடியாக ஆந்திராவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்த செக்ஸ் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

சோனியா கடும் அதிருப்தி

என்.டி.திவாரி மீது ஏற்கனவே சோனியாவுக்கு பலமான அதிருப்திகள் இருந்து வந்தன. மத்திய அமைச்சராக அங்கம் வகித்தபோது பல பிரச்சினைகளில் இவர் குடைச்சல் கொடுப்பவராக இருந்தார். வயதான பிறகு இவர் கவர்னர் பதவி வேண்டும் என்று கறாராக கேட்டபோதும், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் எரிச்சல் அடைந்தனர்.

ஆனால் கவர்னர் பதவியில் அவர் எதிர்பார்த்த அளவுக்கு திறம்பட செயல்படவில்லை. ராஜசேகரரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த பிறகு, அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவாளர்கள் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியபோது, அந்த சூழ்நிலையை என்.டி.திவாரி சுமூகமாக கையாளவில்லை. அதுபற்றி அவர் கண்டு கொள்ளவே இல்லை.

அதுபோல தெலுங்கானா பிரச்சினை வெடித்து ஆந்திராவே அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அதை தீர்த்து அமைதி ஏற்படுத்த அவர் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. இது காங்கிரஸ் மேலிட தலைவர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் திவாரி இன்று மாலை தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமாக் கடிதத்தை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு அவர் அனுப்பி வைத்தார்.

அவரது இடத்தில் விரைவில் புதியவர் நியமிக்கப்படவுள்ளார். இந்தப் பொறுப்புக்கு முதலில் கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியை நியமிக்க காங்கிரஸ் கட்சி யோசித்ததாம். ஆனால் வேண்டாம் என சாண்டி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் வேறு ஒருவர் விரைவில் புதிய ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார்.

விபச்சாரப் பெண்கள் பேட்டி

இந்த நிலையில் திவாரியுடன் உல்லாசமாக இருந்த விபச்சாரப் பெண்கள், திவாரியின் லீலைகளையும், அவரது வயதுக்குப் பொருத்தமே இல்லாமல் அவர் நடந்து கொண்டது குறித்து ஆந்திர பத்திரிக்கை ஒன்றுக்கு விளக்கியுள்ளார்.

மேலே ஜாலி - கீழே நாயுடு, சிரஞ்சீவியிடம் மனு

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஆந்திர கவர்னர் என்.டி. திவாரிக்கு இளம் பெண்கள் மீது மோகம் அதிகம். அவரது ஆசையை தீர்ப்பதற்காக எங்களை ராதிகா கவர்னர் மாளிகைக்கு அழைத்துச் செல்வார்.

எங்களை கவர்னர் முதல் மாடியில் தங்க வைத்திருந்தார். அப்போது நாங்கள் மேல் தளத்தில் இருந்தபடியே கீழ் தளத்தில் நடப்பதை வேடிக்கை பார்ப்போம். அவரிடம் முன்னாள் முதல்வர் சந்திரபாபுநாயுடு, நடிகர் சிரஞ்சீவி போன்றோர் மனு கொடுத்ததை பார்த்துள்ளோம்.

ஸ்டண்ட் நடிகையை கட்டி அணைத்தார்

ஒரு நாள் பிரபல ஸ்டன்ட் நடிகை ஒருவர் திவாரியிடம் மனு கொடுக்க வந்திருந்தார். அப்போது மனுவை வாங்கிய கவர்னர் திடீரென அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். இதை சற்றும் எதிர்பாராத நடிகை வெலவெலத்துப் போனார்.

இதே போல் கவர்னர் தன்னிடம் மனு கொடுக்க வரும் அழகான பெண்களை கட்டி அணைத்துக் கொள்வார். அந்த பெண்கள் அவர் வயதானவர் என்பதால் இச்செயலை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

ஆனால் எங்களுக்குத்தான் அவரது உண்மையான சுயரூபம் தெரியும். எங்களை கவர்னருக்கு அனுப்பும் ராதிகா நிறைய காரியங்களை சாதித்து வந்தார் என்று தெரிவித்துள்ளனர்.

உடம்பு சரியில்லாததால் ராஜினாமாவாம்...!!!

என்.டி.திவாரி குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ள ராஜினாமாக் கடிதத்தில், தனது உடல் நிலை சரியில்லாததால், தொடர்ந்து பணியாற்ற இயலாத நிலையில் இருப்பதாக காரணம் கூறியுள்ளாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+