பொங்கல் - சென்னையிலிருந்து 1000 சிறப்பு பேருந்துகள் விட ஏற்பாடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு 1000 சிறப்புப் பேருந்துகள் விடப்படவுள்ளன.

சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் அனைத்தும் நிரம்பியுள்ளன. சிறப்பு ரயில்களிலும் இடம் இல்லை.

அதேபோல அரசுப் பேருந்துகள், ஆம்னி பஸ்களிலும் இடமில்லை. இதையடுத்து சிறப்பு ரயில்கள், பேருந்துகள் விட மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையடுத்து பொங்கல் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக அரசு போக்குவரத்து கழகம் சென்னையில் இருந்து 1000 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.

அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 80 பஸ்கள் விடப்படுகிறது. வழக்கமாக செல்லும் 1000 விரைவு பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து செல்கின்றன. இது தவிர கூடுதலாக இந்த பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை மையமாக வைத்து இயக்கப்படும் அரசு போக்குவரத்து கழக பஸ்களில் விழுப்புரம் போக்குவரத்து கழகம் மட்டும் 600 சிறப்பு பஸ்களை இயக்குகிறது. கோயம்பேட்டில் இருந்து தேவைப்படும் பல்வேறு பகுதிகளுக்கு இந்த பஸ்கள் இயக்கப்படும்.

பொங்கலுக்கு 2 நாட்களுக்கு முன்பாகவும், பொங்கல் முடிந்து 17, 18 ஆகிய தேதிகளிலும் சிறப்பு பஸ்கள் விடப்படும் என்று நிர்வாக இயக்குனர் பரமசிவம் தெரிவித்தார்.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து எந்த நேரமும் பஸ் புறப்பட்டு செல்லும் வகையில் விரிவாக வசதி செய்யப்பட்டுள்ளது.

கோவை போக்குவரத்துக் கழகத்தில் இருந்து சென்னைக்கு 50 பஸ்களும், சேலம் போக்குவரத்து கழகத்தில் இருந்து 100 பஸ்களும், மதுரையில் இருந்து 100 பஸ்களும் கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் இருந்து 100 பஸ்களும் இயக்கப்படுகின்றனர்.

சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, சேலம், கோவை, கும்பகோணம், தஞ்சாவூர், புதுச்சேரி, திருவண் ணாமலை, வேலூர், கரூர், பெங்களூர், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், வேளாங் கண்ணி, நாகர்கோவில் உள்ளிட்ட அனைத்து பகுதி களுக்கும் சிறப்பு பஸ்கள் புறப்பட்டு செல்கின்றன.

பொதுமக்கள் கூடுதல் தகவல் பெற கோயம்பேடு பஸ் நிலையத்தில் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+