மாற்று கட்சியில் உள்ள வன்னியர்களுக்கு பா.ம.க வலை

ஈரோடு மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில் அந்தியூர் அருகே வன்னியர் சங்க மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பா.ம.க தலைவர் ஜி.கே.மணி பேசுகையில்,
'ஒருகாலத்தில் நாட்டை ஆண்டவர்கள் வன்னியர் தான். ஆனால், இன்று அடிமையாக இருக்கிற நிலைமை உருவாகிவிட்டது.
இன்றைய அரசாங்கத்தில் ஆகட்டும், சமூக அமைப்புகளில் ஆகட்டும், உயர்ந்த பதவியில் வன்னியர்கள் இல்லை. வன்னியர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள்.
தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்தியவர்கள் வன்னியர்கள். ஆனால் அவர்கள் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க போராடுகிறார்களா? இதை தி.மு.க.வில் உள்ளவர்கள் சிந்திக்க வேண்டும்.
பெரும்பாலான வன்னியர்கள் தி.மு.க, அ.தி.மு.க மற்றும் விஜயகாந்தின் தே.மு.தி.க கட்சிகளில் இப்போதும் இருக்கிறார்கள்.
அந்த கட்சியில் இருக்கும் வன்னியர்கள் எல்லோரும் சிந்திக்க வேண்டும். அந்த கட்சி தலைவர்கள் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க போராடினார்களா என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.
அருந்ததியர் சமுதாய மக்களுக்கு, இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு போராடியவர் டாக்டர் ராமதாஸ். நாம் தனி இட ஒதுக்கீட்டை பெற அவருடைய தலைமையில் போராட தயாராக இருக்க வேண்டும்' என்றார்.












Click it and Unblock the Notifications