தமிழக பாஜக தலைவராக பொன்.ராதாகிருஷ்ணன் தேர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக பாஜக தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழக பாஜக அமைப்புத் தேர்தல்கள் நடந்து வந்தன. தற்போது நிர்வாகிகள் தேர்வு நடந்துள்ளது. தற்போதைய தலைவர் இல.கணேசனின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிகிறது.
இதையடுத்து புதிய தலைவராக பொன். ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் வருகிற 30ம் தேதி நடைபெறுகிறது. அப்போது முறைப்படி பொன்.ராதாகிருஷ்ணன் தலைவராக அறிவிக்கப்படுவார்.
வாஜ்பாய் அமைச்சரவையில் இணை அமைச்சராக இருந்தவர் பொன். ராதாகிருஷ்ணன். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
கட்சித் தலைவர் பதவிக்கு பொன்.ராதாகிருஷ்ணன் வருவது இதுவே முதல் முறையாகும்.












Click it and Unblock the Notifications