ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் பங்கேற்ற கட்சி எம்.எல்.ஏவுக்கு லாலு நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
பாட்னா: ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கூட்டத்திற்குப் போன ராஷ்டிரிய ஜனதாதள எம்.எல்.ஏவுக்கு அக்கட்சி நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது.
பீகார் மாநிலம் முங்கர் தொகுதி லாலு கட்சி எம்.எல்.ஏ விஸ்வநாத் குப்தா. இவர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இதனால் லாலு பிரசாத் யாதவ் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில், ஆர்எஸ்எஸ் கூட்டத்திற்குப் போனது குறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி குப்தாவுக்கு லாலு பிசராத் யாதவ் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
இந்த நோட்டீஸுக்கு 15 நாட்களுக்குள் குப்தா திருப்திகரமான பதில் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என ராஷ்டிரிய ஜனதாதளம் எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications