சென்னை ஜி.எச்.சில் பள்ளி மாணவர்களுக்கு தனி வார்டு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அரசு மருத்துவமனையில் மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனிப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது.
வாரத்தில் சனிக்கிழமை மட்டும் செயல்படும் இந்த தனி வார்டில் குறைந்தது 50 பேருக்கு அனைத்து நோய்களுக்கான சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை டீன் மோகனசுந்தரம் கூறுகையில், 'அரசு, மாநகராட்சி, தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிப்பதற்கான விசேஷ வார்டு துவங்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு வார்டில் சிறப்பு மருத்துவர், குழந்தைகள் மருத்துவர், பெண்களுக்கான நோய் மருத்துவர், மனநிலை, பொது மருத்துவர் ஆகிய 5 டாக்டர்கள் இடம்பெறுவார்கள்.
சர்க்கரை நோய் குறித்த சோதனை, ரத்த அணுக்களின் அளவு உள்ளிட்ட அடிப்படையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 10 மணி முதல் 12 மணி வரை இந்த வார்டு செயல்படும்' என்றார்.












Click it and Unblock the Notifications