150 மில்லியன் டாலர் அவசர கடன் கேட்கும் இலங்கை!
கொழும்பு: ஆசிய வளர்ச்சி வங்கியிடம் 150 மில்லியன் டாலர் அவசர கடன் கேட்டுள்ளது இலங்கை.
இத் தகவலைத் தெரிவித்த வங்கியின் இலங்கைக்கான இயக்குநர் ரிச்சர்ட் வோக்ஸ், இலங்கையின் கோரிக்கையை வங்கி பரிசீலிக்கும் என்றும், நாட்டின் வடக்குப் பகுதி வளர்ச்சிக்கு முடிந்த பங்களிப்பைச் செய்யும் என்றும் கூறினார்.
"இலங்கையின் அவசரத் தேவை எங்களுக்குப் புரிந்துள்ளது. அவசர உதவிகளைச் செய்ய வங்கியின் இயக்குநர் குழு முடிவு செய்துள்ளது..." என்றார் வோக்ஸ்.
ஏற்கெனவே இலங்கைக்கு 350 மி்ல்லியன் டாலர் கடன் வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி அனுமதியளித்துள்ளது.
இது அல்லாது, 150 மில்லியன் டாலரை அவசர கடனாக வரும் நாட்களில் வழங்கும் எனத் தெரிகிறது.
ஏற்கெனவே இந்தியா ரூ 1000 கோடியும், சீனா ரூ 1840 கோடியும் வழங்கியுள்ளன. மேலும் பல கோடி ரூபாய் உதவி தருவதாக இவ்விரு நாடுகளும் இலங்கைக்கு உத்தரவாதம் அளித்துள்ளன.












Click it and Unblock the Notifications