செக்ஸ் அர்ச்சகர் கற்பழித்ததாக மேலும் 2 பெண்கள் வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

Devanathan
ஸ்ரீபெரும்புதூர்: அர்ச்சகர் தேவநாதன் கற்பழித்து விட்டதாக மேலும் இரண்டு பெண்கள் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். இவர்களில் ஒருவர் திருமணமாகாத இளம்பெண்.

காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவிலில் பெண்களை மயக்கி கருவறைக்குள் வைத்தே அசிங்கமாக நடந்து கொண்ட அர்ச்சகர் தேவநாதன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நர்ஸ், ஆசிரியை, விஐபி வீட்டுப் பெண்கள் என சகல தரப்புப் பெண்களையும் இவர் தனது காம இச்சைக்கு பயன்படுத்தியது தெரியவந்தது.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரின் மனைவி, தனக்கு பிரசாதத்தில் மயக்க மருந்து கொடுத்து கருவறைக்குள் வைத்து தேவநாதன் கற்பழித்து விட்டதாக புகார் கொடுத்திருந்தார்.

அதை பின்னர் செல்போன் கேமராவில் படமாக்கி அதைக் காட்டி பலமுறை தன்னை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தியதாகவும் அவர் கூறியிருந்தார்.

ஒரு பூக்காரப் பெண்ணும், தேவநாதன் தன்னை குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கற்பழித்து விட்டதாக புகார் கொடுத்துள்ளார்.

கோவிலுக்கு பூ கொடுக்க வரும் போது எல்லாம் செல்போனில் எடுத்த படத்தை காட்டி மிரட்டி பலமுறை என்னை கருவறையில் வைத்து செக்ஸ் லீலையில் ஈடுபட்டார் என்று அவர் வாக்குமூலம் அளித்தார்.

இப்புகார்களின் அடிப்படையில் தேவநாதன் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேவநாதனுக்கு ஆண்மை பரிசோதனையும் சமீபத்தில் நடத்தப்பட்டது.

இந்நிலையில் காஞ்சீபுரம் பகுதியைச் சேர்ந்த மேலும் 2 பெண்கள் போலீசாரிடம் தேவநாதன் தன்னை கற்பழித்து விட்டதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

போலீசார் அந்த 2 பெண்களிடமும் ரகசியமாக விசாரணை செய்து வருவதாக தெரிகிறது. இரண்டு பெண்களில் ஒருவர் திருமணம் ஆகாத இளம்பெண்.
இவர்களிடம் விசாரணை நடைபெற்ற பின் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+