17 வயதில் காமக்களியாட்டத்தைத் தொடங்கி 86 வயதிலும் தொடர்ந்த கில்லாடி திவாரி!

Subscribe to Oneindia Tamil

Tiwari
டேராடூன்: காலம் போன காலத்தில் காமக் களியாட்டத்தில் ஈடுபட்டு அசிங்கப்பட்டு நிற்கும் என்.டி.திவாரி, தனது காம லீலைகளை 17 வயதிலேயே அரங்கேற்றி விட்டாராம்.

40 வயதில் நாய்க்குணம் என்பார்கள் பொதுவாக. ஆனால் 86 வயதில் மகா அசிங்கமான தனது மறுபக்கத்தைக் காட்டி நாட்டு மக்களை திகிலடைய வைத்து விட்டார் என்.டி. திவாரி.

சுதந்திரப் போராட்ட காலம் முதலே

இவரது ஆரம்ப காலம் முதலே பெண்களின் வாசனையுடன்தான் வாழ்ந்து வந்துள்ளார் என்ற மகா அசிங்கமான அத்தியாயம் அம்பலமாகியுள்ளது. அதாவது சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட காலம் முதலே இவர் மன்மத லீலைகளை தொடங்கி விட்டார்.
தனது 17 வயதில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார் திவாரி. அப்போதே இவர் தன்னுடன் சேர்ந்து போராடிய பெண்கள் மீது காமப் பார்வையை வீசியுள்ளாராம்.

ஆண்களுடன் சேர்ந்து போராடாமல், பெண்களுடன் சேர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டாராம் திவாரி. இது நாட்டுக்கு எவ்வளவு பெரிய அசிங்கம். தன்னலம் பாராமல், வெள்ளையர்களை விரட்டப் போராடிய வீர வேங்கைகளுக்கு மத்தியில் இப்படிப்பட்ட வெறி பிடித்தவர்களும் இடம் பெற்றிருந்தது சுதந்திரப் போராட்ட வரலாறுக்கே ஒரு களங்கமாக அமைந்துள்ளது.

1963-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் திவாரி. அதன் பிறகு ஒரு பத்திரிகையில் செய்தியாளராக இருந்தார். அப்போதெல்லாம் அவர் பெண்களை வசீகரித்து தனது வலையில் வீழ்த்துவதில் தீவிரமாக இருந்தாராம்.

1965-ம் வருடம் இளைஞர் காங்கிரசின் முக்கிய தலைவராக இருந்தார். அப்போதுதான் அவரது காமக் களியாட்டம் உச்சத்திற்குப் போனது என்கிறார்கள். இளம் பெண்களுடன் அதிக நட்புடன் பழகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்ததால் பலரையும் தனது வலையில் வீழ்த்தி காங்கிரஸ் பவனை வசந்த பவனாக மாற்றியுள்ளார்.

பின்னர் உ.பி. முதல்வரானர். உ.பியின் முதல்வர், செல்வாக்கு, புகழ், பண பலம், அதிகார பலம் என சகலமும் தன் வசம் இருந்ததால் தன் இஷ்டத்திற்கு பெண்களை வளைக்க ஆரம்பித்துள்ளார்.

திவாரியின் வீக் பாயின்ட்டை சரியாகப் புரிந்து கொண்ட பல பண முதலைகள், பெண்களை அவரிடம் அனுப்பி தங்களது காரியத்தை சாதித்துக் கொண்டார்களாம்.

ஏதாவது காரியம் ஆக வேண்டும் என்றால் முதலில் அழகான பெண்களை திவாரியிடம் அனுப்பி வைத்தால் போதும் என்ற அளவுக்கு அவர் படு வீக்காக இருந்துள்ளார்.

பின்னர் உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல் முதல்வராக அவர் பொறுப்பேற்றபோது நேபாளத்தைச் சேர்ந்த சரிகா பிரதான் என்ற 23 வயதுப் பெண்ணை தனது ஆசைநாயகியாக்கியுள்ளார். அவருக்கு தனது அமைச்சர்களுக்கு கொடுத்த அதே சலுகைகளையும் கொடுத்து வைத்திருந்தார்.

வந்தே மாதரம் பாடிய பெண்ணையும் வளைத்த வக்கிரம்

இதை விட கொடுமையான ஒரு சம்பவம் இது. ஒரு நிகழ்ச்சியின் தன் முன்பு நின்று வந்தே மாதரம் பாடிய பெண் மீது மோகம் கொண்டுள்ளார் திவாரி. அவர் பாடியது என்ன பாடல், அதன் முக்கியத்துவம் என்ன என்பதையெல்லாம் மறந்து விட்டு பாடிய பெண்ணின் உடல் அழகில் மயங்கி அவரை படுக்கை வரை கூட்டிக் கொண்டு போய் விட்டாராம் திவாரி.
திவாரியின் லீலைகள் வீடியோவில் வெளியாகியிருப்பது இது முதல் முறையல்ல. ஏற்கனவே நரேந்திர சிங் ஜோகி என்பவர் திவாரியின் லீலைகளை ஒரு சிடியில் வெளியிட்டு பிரபலமாகி, அவர் கோடீஸ்வரராகியும் விட்டாராம்.

அமெரிக்க நர்சுகளிடமும்

எப்போதும் பெண்களுடன் புழங்கிக் கொண்டிருந்த திவாரியையும் ஒரு பெண் மணந்தார். அந்த அபாக்கியவதியின் பெயர் சுசீலா சர்மா. இவர் 1984ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்க மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
அந்த இடத்திலும் கூட தனது வாலை நீட்டி நர்சுகளிடம் விளையாட முயன்று கடுமையாக கண்டிக்கப்பட்டாராம் திவாரி.

இந்த நிலையில் தனது கணவரின் சகலகலா லீலைகள் குறித்து சுசீலாவுக்குத் தெரிய வந்து அதிர்ந்தார். திவாரியின் செட்டப்களில் ஒருவரை கண்டுபிடித்த சுசீலை, அந்தப் பெண்ணை சரமாரியாக அடித்து உதைத்தார். அந்தப் பெண்ணுக்கும், திவாரிக்கும் பிறந்த பிள்ளைதான் சில ஆண்டுகளுக்கு முன்பு திவாரி எனது அப்பா என்று கூறி கோர்ட் படியேறினார். ஆனால் கோர்ட் அந்த வழக்கையே தள்ளுபடி செய்து விட்டது.

இன்னொரு சம்பவத்தில், வேறு ஒரு பெண் வாகாக கிடைத்ததால், திவாரியால் புறக்கணிக்கப்பட்ட இன்னொரு பெண், திவாரியை நேரில் போய்ப் பார்த்து அவரை சரமாரியாக அடித்து உதைத்தாராம். அந்த சம்பவமும் இப்போது லீக் ஆகியுள்ளது.

நரசிம்மராவையை சிரிக்க வைத்தவர்

ஒருமுறை நரசிம்மராவுக்கும், திவாரிக்கும் இடையே கடும் மோதல். இந்த மோதலுக்குப் பின்னர் திவாரியை காணவில்லை. அவரை நரசிம்மராவ் ஆள் வைத்து அடித்து கடத்திக் கொண்டு போய் விட்டதாகக் கூட பரபரப்பாக பேசப்பட்டது.
இதுகுறித்து ராவிடமே செய்தியாளர்கள் கேட்டபோது எதற்கும் சிரிக்காத நரசிம்மராவ், இந்தக் கேள்வியைக் கேட்டதும் பளாரென சிரித்தபடி, எங்கேயும் போயிருக்க மாட்டார். டெல்லியில் இருந்து உ.பி. செல்லும் வழியில் கஜ்வாலா என்ற இடத்தில் பிர்லாவுக்கு சொந்தமான விருந்தினர் மாளிகை இருக்கிறது. அங்கு போய் பார்த்தால் உண்மை தெரியும் என்றார்.

அங்கே என்ன விசேஷம் என்று பத்திரிக்கையாளர்கள் விசாரித்தபோதுதான் கஜ்வாலா மாளிகையில் குஜால் வேலைகளில் திவாரி தீவிரமாக இருந்தது தெரிய வந்தது.

திவாரியின் வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கமும், பெண்களின் வாசனை இல்லாமல் இருந்ததே இல்லை. அந்த அளவுக்கு எப்போது பார்த்தாலும் பெண்களுடனேயே இருந்து வந்துள்ளார் இந்த காமக் களியாட்ட நாயகன்.

86 வயதான பிறகும் திவாரியை விடவில்லை இந்த காமக் களியாட்டங்கள். திவாரியின் வேகம் இன்னும் குறையாமல் இருப்பதை சரியாக புரிந்து வைத்துக் கொண்டுதான் ராதிகா, பெண்களை சப்ளை செய்து அவர் மூலம் பல காரியங்களை சாதித்துக் கொண்டார்.

ராதிகாவின் சேவையால் திருப்தி அடைந்த திவாரி, அவருக்கு விலை உயர்ந்த செல்போனை வாங்கிக் கொடுத்துள்ளாராம்.

ராதிகா அனுப்பி வைத்த பெண்களால் உற்சாகமடைந்த திவாரி, அவரது பல கோரிக்கைகளை நிறைவேற்றி வைத்துள்ளார். அவர் அனுப்பி வைத்த பெண்களில் பலர் நிரந்தரமாக ஆளுநர் மாளிகையிலேயே தங்கிக் கொண்டனராம். ராஜ் பவனை தனது ராச லீலைகளின் பவனமாக மாற்றி கேவலப்படுத்தி வைத்துள்ளார் திவாரி.

ஆளுநர் மாளிகையை ஒரு விபச்சார மாளிகை போலவே மாற்றியுள்ளார் திவாரி. ஆளுநரே அலங்கோலமாக நடக்கும்போது நாம் மட்டும் சும்மா இருந்தால் எப்படி என்று அங்கு வேலை பார்த்து வந்த பல அதிகாரிகளும் கூட மோசமான பாதையில் நடை போடத் தொடங்கியுள்ளனர். அங்கு வேலை பார்த்த பல பெண் ஊழியர்களையும் அவர்கள் கட்டாயப்படுத்தியும், மிரட்டியும் தங்களது இச்சைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டனராம்.

இதுகுறித்து அரசுக்கு ரொம்ப லேட்டாகத்தான் தெரிய வந்ததாம். இதையடுத்து திவாரி மூலம் வந்த சிபாரிசுகளை தூக்கி தூரப் போட ஆரம்பித்து விட்டனர். திவாரிக்குரிய மதிப்பையும் நிறுத்திக் கொண்டனராம். கிட்டத்தட்ட கதவை சாத்தி மூடி விட்டது போன்ற நிலை. இதனால் திவாரியால் எதையும் சாதிக்க முடியவில்லை. இதை வெளியில் காட்டிக் கொள்ளவும் முடியவில்லை.

இதனால்தான் ராதிகா மிகவும் ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருந்த குவாரி உரிமத்தை திவாரியால் பெற்றுத் தர முடியாமல் போனதாம். இதனால் கோபமடைந்த ராதிகா, திவாரியின் லீலைகளை அம்பலப்படுத்தி அசிங்கப்படுத்தி விட்டார்.

திவாரியின் ஊழல்கள்- கமிஷன் அறிக்கை தாக்கல்:

இதற்கிடையே, உத்தரகாண்ட் மாநில முதல்வராக என்.டி.திவாரி இருந்தபோது நடந்த ஊழல்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணைக் கமிஷன் தனது இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.

கடந்த 2002 முதல் 2007-ம் ஆண்டு வரை, உத்தரகாண்ட் மாநில முதல்வராக திவாரி இருந்தபோது அவர் செய்ததாக கூறப்படும் 56 ஊழல்கள் குறித்து, அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்த, பா.ஜ.கவைச் சேர்ந்த முதல்வர் பி.சி.கந்தூரி, நீதிபதி ஆர்.ஏ.சர்மா தலைமையில் விசாரணை கமிஷனை அமைத்தார்.

சர்மா கமிஷன் தனது விசாரணையின் முடிவில் இடைக்கால அறிக்கைகளைத் தாக்கல் செய்துள்ளது. விரை, உத்தரகாண்ட் மாநில அரசிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட இடைக்கால அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளது.

விரைவில் சர்மா கமிஷன் தனது இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யவுள்ளது.

விடக் கூடாது...

இதற்கிடையே, செக்ஸ் அசிங்கத்தில் ஈடுபட்ட என்.டி.திவாரியை வயதானவர் என்ற காரணத்தைக் காட்டி சும்மா விடக் கூடாது. கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று ஆந்திராவைச் சேர்ந்த பல்வேறு மகளிர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+