500 உள்ளாட்சிப் பதவிகளுக்கு பிப்ரவரியில் தேர்தல்
திருவண்ணாமலை: தமிழகத்தில் காலியாக உள்ள 500 உள்ளாட்சிப் பதவிகளுக்கு வரும் பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்தப்படும் என தமிழக தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், அனக்காவூர் ஒன்றியத்தில் உள்ள அனப்பத்தூர் ஊராட்சி வார்டு உறுப்பினர் நளினி, ஊராட்சி கூட்டங்களில் கலந்து கொள்ளாததால், அவரை பதவி நீக்கம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தேர்தல் கமிஷனுக்கு மனு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழக தேர்தல் கமிஷனர் சந்திரசேகரன் விசாரணை நடத்தினார். மேலும், வேலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திரனிடம் உள்ளாட்சி இடைத் தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்பு செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், 'தமிழகத்தில் தற்போது 500 உள்ளாட்சி பதவிகள் காலியாக உள்ளன. இந்த காலிப் பணியடங்களுக்கு வரும் 2010 பிப்ரவரி மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில், மின்னணு ஓட்டுப்பதிவும், கிராம ஊராட்சிகளில் ஓட்டுச் சீட்டு முறையும் பின்பற்றப்படும்.
அனைத்து உள்ளாட்சி பணி இடங்களுக்கான பதவிக் காலம், 2011ல் முடிவடைய உள்ளது. இதனால், உள்ளாட்சி தேர்தல் குறித்து, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை கூட்டம், வரும் 2010 இறுதியில் அல்லது 2011 முதல் மாதம் நடத்தப்படும்.
வரும் 2011ல் நடத்தப்படும் உள்ளாட்சி தேர்தலுக்காக, 25 ஆயிரம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. இதற்கு அரசு நிதி ஒதுக்கும்' என்றார்.












Click it and Unblock the Notifications