நிமோனியா- ஜோதிபாசு உடல்நிலையில் முன்னேற்றம்
கொல்கத்தா: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் ஜோதிபாசுவின் உடல்நிலை தேறிவருவதாக மருத்துவர்கள் கூறினர்.
95 வயதான முதுபெரும் மார்க்சிஸ்ட் தலைவரும், மேற்குவங்க முன்னாள் முதல்வருமான ஜோதிபாசு நுரையீரல் கோளாறு தொடர்பான நோயால் அவதிப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கொல்கத்தா ஏ.எம்.ஆர்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில் முந்தைய தினத்தை விட அவரின் உடல்நிலையில் இன்று முன்னேற்றம் காணப்படுவதாக மருத்துவமனை கண்காணிப்பாளர் தீபாஷிஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
எனினும் அடுத்த 48 மணிநேரத்துக்கு ஜோதிபாசு ஐசியு வார்டில் மருத்துவர்களின் மூழு கண்காணிப்பில் இருக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறினார்.
நுரையீரலில் ஏற்பட்ட வீக்கத்தைத் தவிர மற்ற பிரச்னைகள் அனைத்தும் சரியாகிவிட்டதாகவும் அவர் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications