ருசிகா வழக்கு: ரத்தோர் மீது 3வது எஃப்ஐஆர் பதிவு

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: ருசிகா தற்கொலை வழக்கில் ஹரியானா முன்னாள் டி.ஜி.பி ரத்தோர் மீது 3ஆவதாக மேலும் ஒரு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ருசிகாவை தற்கொலைக்கு தூண்டிய பிரிவின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரியானா மாநிலத்தை சேர்ந்த மாணவி ருசிகா. கடந்த 1990ம் ஆண்டுகளில் ருச்சிகாவுக்கு 14 வயதே நிரம்பியிருந்த நிலையில் அம்மாநில டி.ஜி.பி.யாக இருந்த ரத்தோர் பாலியல் தொந்தரவுகள் செய்துள்ளார்.

ருசிகாவுடன் அவரது குடும்பத்துக்கும் சேர்த்து ரத்தோர் தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார். இதன் காரணமாக 1993ம் ஆண்டு ருசிகா தற்கொலை செய்து கொண்டார். நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.

19 ஆண்டுகளுக்கு பிறகு இதில் தீர்ப்பு கூறப்பட்டது. ரத்தோருக்கு 6 மாதம் ஜெயில் தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதிக்கப்பட்டது. ருசிகாவை மானபங்கப்படுத்திய வழக்கில் மட்டுமே அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ருசிகாவை தற்கொலைக்கு தூண்டிய பிரிவுகளில் தண்டனை வழங்கப்படவில்லை. மாநிலம் முழுவதும் ரத்தோருக்கு எதிராக பலத்த எதிர்ப்பு கிளம்பின. இதனையடுத்து ரத்தோர் மீது புதிதாக 2 எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில் ருசிகா வழக்கில் ரத்தோர் மீது 3ஆவது எஃப்ஐஆரை ஹரியானா போலீசார் பதிவு செய்துள்ளனர். தற்கொலைக்கு துண்டிய குற்றத்துக்காக பிரிவு 306ன் கீழ் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+