வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படும் ரசாயானப் பொருள் மூடைகள்- கோவையில் பறிமுதல்
கோவை வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படும் அம்மோனியம் நைட்ரேட் வெடிமருந்து அடங்கிய மூடைகள் கோவையில் மீட்கப்பட்டுள்ளன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையில் உலத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறவுள்ள நிலையில் அங்கு பெருமளவில் வெடிமருந்துப் பொருட்கள் சிக்கியிருப்பது காவல்துறையை அதிர வைத்துள்ளது.
கோவையில் 2 கிட்டங்கிகளில் பெருமளவில் வெடிமருந்துப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் படை அந்த கிட்டங்கிகளுக்கு விரைந்தது.
சம்பந்தப்பட்ட கிட்டங்கிகளில் கிட்டத்தட்ட 6,700 கிலோ அம்மோனியம் நைட்ரேட் மொத்தம் 135 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
இந்த அம்மோனியம் நைட்ரேட்தான் வெடிகுண்டுகள் தயாரிக்க முக்கிய மூலப் பொருளாகும்.
இதையடுத்து அந்த வெடிமருந்து மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கிட்டங்கிகளின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
எதற்காக இந்த வெடிபொருள் பெருமளவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications