ரேஷன் கடையில் ஹெல்மெட்-இ.ம. கட்சி கோரிக்கை
பல்லடம்: ரேஷன்கடைகளில் ஹெல்மெட் விற்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதியிடம் மனு அளித்துள்ளதார் இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அண்ணாதுரை. அவர் முதல்வரிடம் அளித்துள்ள மனுவில்,
'தமிழகத்தில் பல்வேறு மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. போலீசார் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்கின்றனர்.
போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து அவசரப்பட்டு குறைந்த விலையில் கிடைக்கும் தரமில்லாத ஹெல்மெட்டை பொதுமக்கள் வாங்கி பயன்படுத்துகின்றனர்.
தரமில்லாத ஹெல்மெட்டை பயன்படுத்துவதால் கழுத்துவலி, தலைவலி போன்றவை ஏற்படுகின்றன. இவற்றை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அரசே தரமான ஹெல்மெட்டுகளை நியாய விலை கடைகளில் விற்பனை செய்ய வேண்டும்' எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications