மார்க்சிஸ்ட் தலைவர் ஜோதிபாசு கவலைக்கிடம்
Subscribe to Oneindia Tamil

96 வயதான ஜோதிபாசு நுரையீரல் தொடர்பான பாதிப்புகளால் கடந்த வெள்ளிக்கிழமை கோல்கத்தாவில் உள்ள ஏஎம்ஆர்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சைக்கு பிறகு கடந்த இருதினங்களாக உடல்நிலை தேறிவருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும் முழு நேர மருத்துவ கண்காணிப்பிலேயே வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று காலை அவரின் உடல்நிலை மோசமடைந்ததாகவும், தற்போது அவர் வென்டிலேட்டர் மூலமாகத் தான் சுவாசித்து வருவதாகவும் ஏஎம்ஆர்ஐ மருத்துவமனை கண்காணிப்பாளர் தேவாஷிஷ் சர்மா கூறினார்.
ஜோதிபாசுவின் உடல்நிலையை கண்காணிக்க சிறப்பு மருத்துவர் குழு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் இடம் பெற்றுள்ள மருத்துவர் ஏகே மெய்டி, 'ஜோதிபாசுவின் உடல்நிலை சீராக இல்லை' எனக் கூறினார்.












Click it and Unblock the Notifications