பெண்ணாகரம் இடைத்தேர்தல்-அதிமுகவுக்கு சிபிஐ ஆதரவு
Subscribe to Oneindia Tamil

அதிமுக கூட்டணியி்ல் இல்லாவிட்டாலும் கடந்த திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி இடைத் தேர்தலிலும் அதிமுகவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை ஆதரித்தன.
அதிமுகவுடன் மேடையேறாவிட்டாலும் அந்தக் கட்சிக்காக பிரச்சாரம் செய்தன.
இந் நிலையில் பெண்ணாகரம் சட்டமன்ற இடைத் தேர்தலிலும் அதிமுகவை ஆதரிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் அறிவித்துள்ளார்.
சென்னையில் இன்று நடந்த அக் கட்சியின் மாநிலக் குழு மாநாட்டில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதிமுகவை ஆதரிக்கும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications