சொத்து குவிப்பு வழக்கு- தள்ளுபடி செய்ய ஜெ. மனு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: அதிமுகபொதுச்செயலாளர் ஜெயலலிதா மீது பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவரும் சொத்துக் குவிப்பு வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் எனக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா, தினகரன், சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரி ஜெயலலிதா சார்பில் வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் நேற்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இம்மனு அடுத்த ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

ஜெலலிதா சார்பில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 'வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா உள்பட ஐந்து பேர் மீது 1997ம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்குத் முறையாக தொடுக்கப்படவில்லை என்பதை கவனிக்காமல் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. சிறப்பு நீதிமன்றம் ஊழல் தடுப்புச் சட்டப்படி குற்றச்சாட்டை குறிப்பிடவில்லை.

எனவே, அச்சட்டப்படி ஜெயலலிதாவும் மற்றவர்களும் குற்றம் செய்யவில்லை என்பது தெளிவாகிறது. மேலும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள குற்றங்கள் பற்றி குறிப்பிடப்படவில்லை.

தற்போது இந்த வழக்கை விசாரித்துவரும் நீதிபதியும் இந்த அம்சங்களை கவனிக்கவில்லை. 1997ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி ஜெயலலிதா மீது குற்றச்சாட்டு கூறி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுப்படி இப்போது விசாரணை நடைபெறவில்லை.

எனவே, தற்போது நடைபெற்றுவரும் விசாரணை மதிப்பில்லாததாகி விடுகிறது. மேலும் இந்த வழக்கே தனி மனிதனுக்கு அரசியல் சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமைக்கு எதிரானது. அதுபோல் கிரிமினல் நடைமுறைச்சட்டத்துக்கும் எதிரானது.

இந்த வழக்கை விசாரித்துவரும் பெங்களூர் கூடுதல் சிட்டி சிவில் மற்றும் செசன்ஸ் நீதிபதிமன்றமும் மனித உரிமையை மீறியுள்ளது, ஜெயலலிதாவின் அடிப்படை உரிமை பறிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த நீதிமன்றம் 1997ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை கவனிக்க வேண்டும்.

விசாரணைக்கு உகந்தது அல்லாத இந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும் என அதில் நவநீத கிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+