மாஜிக்கள் கட்சியில் மீண்டும் சேர மணிசங்கர் அழைப்பு
மதுரை: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறிய தலைவர்கள் மீண்டும் கட்சியில் வந்துசேர வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மணிசங்கர் அய்யர் வேண்டுகோள் விடுத்தார்.
மதுரையில் ராஜிவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மணிசங்கர் அய்யர்,
'தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டும். பொற்காலமாக போற்றப்படும் காமராஜர் ஆட்சியை தமிழகத்தில் மலரச் செய்ய நம்மால் முடியும்.
கட்சியில் உள்ள தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டால் 'காமராஜர் ஆட்சி' சாத்தியமானது தான்.
காங்கிரசில் இருந்து வெளியேறிய பழைய தலைவர்கள் மீண்டும் கட்சியில் வந்து சேரவேண்டும். கட்சியின் நிர்வாகப் பொறுப்புகளில் ஆதிதிராவிடப் பிரிவைச் சேர்நதவர்கள் உரிய விகிதத்தில் இடம்பெறச் செய்யவேண்டும்.
ராஜிவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் குறைந்தது 20 லட்சம் பேரையாவது உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்' என்றார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலுவும் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.












Click it and Unblock the Notifications