முழு செயற்கை சுவாசத்தில் ஜோதிபாசு
கொல்கத்தா: முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரான ஜோதிபாசுவின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. நேற்று மாலை அவருக்கு அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாச அளவு குறைக்கப்பட்டது. இருப்பினும் தற்போது மீண்டும் முழு செயற்கை சுவாசத்தில் அவர் வைக்கப்பட்டுள்ளார்.
நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளார் ஜோதிபாசு. கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் தொடர்ந்து அபாய கட்டத்தில் உள்ளார்.
95 வயதான ஜோதிபாசுவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவர் செயற்கை சுவாசத்தில் வைக்கப்பட்டார். நேற்று மாலை இது லேசாக தளர்த்தப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் முழு செயற்கை சுவாசத்தில் அவர் வைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பாக்டீரியா சோதனை முடிவுகள் இன்று தெரிய வரும் என்று டாக்டர் சுஸ்ருத் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுகுரித்து அவர் கூறுகையில்,தற்போது அவருக்குக் கொடுக்கப்பட்டு வரும் மருந்துகள் எந்த அளவுக்கு பயன் தந்துள்ளன என்பது இந்த சோதனையில் தெரிய வரும். அதற்கேற்ப சிகிச்சை முறையில் மாற்றம் செய்யப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications