ராமலிங்க ராஜூ மீது புதிய குற்றப்பத்திரிகை!
ஹைதராபாத்: சத்யம் மோசடி வழக்கில் அதன் நிறுவனர் ராமலிங்க ராஜூ மீது புதிய குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது சிபிஐ.
சரியாக ஒரு ஆண்டுக்கு முன் ஜனவரி மாதம் இதே தினத்தில்தான் ராமலிங்க ராஜூவின் மோசடிகள் அம்பலமாகின.
தோண்டத் தோண்ட புதுப்புது பூதங்கள் கிளம்பின இந்த விவகாரத்தில். இதுவரை ரூ 7800 கோடி வரையிலான மோசடிகள் வெளிவந்தன. இது தவிர இன்னும் பல கோடி மோசடிகள் வெளிச்சத்துக்கு வராமலேயே உள்ளதாக சிபிஐ கூறியது.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 2009-ல்ராஜூ மீது முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ. அதில் பல நாடுகளில் போய் சிபிஐ குழு மேற்கொண்ட விசாரணைகளில் கண்டறிந்த மோசடிகள் பதிவு செய்யப்பட்டன. ராஜூ மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த 5 முக்கிய அதிகாரிகள் இந்தக் குற்றச்சாட்டுகளில் இடம்பெற்றுள்ளனர்.
பின்னர் நவம்பர் 2009-ல் இரண்டாவது குற்றப் பத்திரிகை பதிவு செய்யப்பட்டது. இதில்பிரைஸ்வாட்டர்ஹவுஸ்கூப்பர் ஆடிட்டிங் நிறுவனத்தின் மூன்று அதிகாரிகளின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன.
இந்த நிலையில், இப்போது தாங்கள் கண்டுபிடித்த புதிய உண்மைகளோடு மூன்றாவது குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது சிபிஐ.












Click it and Unblock the Notifications