ஸ்வைன் ப்ளூ-இந்தியாவில் பலி 1035 ஆனது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானோரின் எண்ணிக்கை இந்தியாவில் 1035 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மட்டும் 6 பேர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானார்கள். இந்தியாவில் தொடர்ந்து பன்றிக் காய்ச்சலுக்குப் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் உள்ளது.
நாடு முழுவதும் நேற்று மட்டும் 99 பேருக்கு பன்றிக் காய்ச்சல் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தியாவில் இதுவரை 1 லட்சத்து 14 ஆயிரத்து 79 பேருக்கு பன்றிக் காய்ச்சல் தொடர்பான சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 23 சதவீதம் பேருக்கு அது தாக்கியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications