'வாலிப' திவாரிக்கு மீண்டும் வாரிசு சிக்கல்-நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வாலிபர் ஒருவர் தொடர்ந்துள்ள வாரிசு விவகார வழக்கில் விளக்கம் அளிக்குமாறு என்.டி.திவாரிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

50 ஆண்டுகளுக்கும் மேலாக பழுத்த அரசியல் அனுபவம் கொண்ட காங்கிரஸ்காரர் என்.டி.திவாரி, செக்ஸ் புகாரின் எதிரொலியாக ஆந்திர கவர்னர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து ஓரங்கட்டப்பட்டுள்ளார்.

இவர் ஆந்திர கவர்னராக இருந்த சமயத்திலேயே டெல்லி நீதிமன்றத்தில் ரோஹித் ஷேகர் என்பவர், 'நான் என்.டி.திவாரிக்கு பிறந்தவன். என்னை திவாரியின் மகனாக சட்டப்படி அறிவிக்கவேண்டும்' என்று மனுத்தாக்கல் செய்தார்.

கடந்த நவம்பர் 3ம் தேதி இம்மனு விசாரணைக்கு வந்தபோது, திவாரி ஆந்திர கவர்னராக இருந்தார். இதை காரணம் காட்டியும், திவாரி சார்பில் தெரிவிக்கப்பட்ட வாதத்தை ஏற்றும் ரோஹித்தின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

தற்போது திவாரி ஆந்திர கவர்னர் பதவியில் இருந்து விலகிய நிலையில், செக்ஸ் புகார்களும் இருக்கும சூழலில் 29 வயது வாலிபர் ரோஹித் மீண்டும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இன்று இம்மனுவை ஏற்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலான பெஞ்ச், ரோஹித்தின் மனு குறித்து விளக்கம் அளிக்குமாறு என்.டி.திவாரிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி வரும் பிப்ரவரி 9ம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+