வெடிபொருள் தயாரித்த வழக்கு- தமிழ்நாடு தொழில் வர்த்தக சபை தலைவர் நீதிமோகன் கைது

Subscribe to Oneindia Tamil

மதுரை: காரைக்காலில் உள்ள தனது தொழிற்சாலையில் உரத் தயாரிப்புக்கு என பொட்டாசியம் குளோரைடை வாங்கி அதைக் கொண்டு வெடிபொருள் தயாரித்த வழக்கில் சிக்கிய மதுரை தொழிலதிபரும், தமிழ்நாடு தொழில் மற்றும் வர்த்தக சபை தலைவருமான நீதிமோகன் நேற்று சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.

அவர் தவிர மேலும் நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும், மதுரை சிபிஐ கோர்ட்டில் அதிகாரிகள் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கைதான மற்றவர்கள் - வைகை கெமிக்கல்ஸ் துணைத் தலைவர் தனசேகரன், உர விநியோகஸ்தர்கள் செல்வராஜ், சண்முகம், காரைக்கால் குளோரைடு பேக்டரி தலைவர் மனோகர் ஆகியோர்.

காரைக்காலில் உள்ள காரை கெமிக்கல்ஸ் மற்றும் வைகை கெமிக்கல்ஸ் உரத் தொழிற்சாலையின் இயக்குநராக நீதிமோகன் உள்ளார்.

உரம் தயாரிக்கப் பயன்படும் பொட்டாசியம் குளோரைடிலிருந்து பொட்டாசியம் குளேரேட் என்னும் மூலப்பொருளை எடுத்து விதிமுறைகளை மீறி வெடி பொருள்களைத் தயாரிக்க இவர் பயன்படுத்தி வந்து அதன் மூலம் பலகோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டு வந்ததாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

உரங்கள் தயாரிக்கப் பயன்படும் பொட்டாசியம் குளோரைடிலிருந்து, பொட்டாசியம் குளோரேட் மூலப் பொருளை பிரித்து எடுத்து, வெடி உப்பு மற்றும் பாறையை உடைக்கப் பயன்படும் டெட்டனேட்டர் குச்சிகள் விதிகளை மீறி, தயாரிக்கப்பட்டு வருவதாகவும், பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் புதுச்சேரி அதிமுக புகார் கூறியது.

இதைடடுத்து போலீஸார் விசாரணை நடத்தினர். நான்கு மாதங்களுக்கு முன்பு இரு நிறுவனங்களும் மூடி சீல் வைக்கப்பட்டன. பின்னர் வழக்கு சிபிஐக்கு மாற்றப்ட்டது.

நீதிமோகனின் மோசடி குறித்து கடந்த பல நாட்களாக அவரிடம் மதுரையில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையின் இறுதியில் நேற்று கைது செய்யப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+