தமிழகத்தில் இலங்கை சபாநாயகர் மீது செருப்பு வீச்சு
Subscribe to Oneindia Tamil

தமிழகத்தில் புகழ் பெற்ற பல்வேறு ஸ்தலங்கள் உள்ளது. அதில் கும்பகோணம் அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோயிலும் ஒன்று.
இக்கோவிலுக்கு இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் லோகு பண்டாரா இன்று வருகை தந்தார். அவருடன் மனைவி, மகன் உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.
வைத்தீஸ்வரன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு அவர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், பெரியார் தி.கவினர் திரண்டு வந்தனர்.
லோகு பண்டாராவின் கார் வந்ததும் கார் மீது செருப்பை வீசி எறிந்தனர். இதில் பண்டாராவின் மகனுக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த இலங்கை சபாநாயகர் பண்டாராவும், அவரது மனைவியும் காரை விட்டு இறங்கவில்லை.
விரைந்து வந்த போலீஸார் இலங்கை சபாநாயகரின் கார் அங்கிருந்து பாதுகாப்புடன் செல்ல உதவினர். அதன் பின்னர் செருப்பு வீச்சு மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை கைது செய்து அப்புறப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications