இலங்கை பத்திரிகையாளர் திசநாயகம் ஜாமீனில் விடுதலை!
கொழும்பு: இலங்கை பத்திரிகையாளர் ஜேஎஸ் திசநாயகம் ரூ 50,000 ரொக்க ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாதத்திற்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் ஜே எஸ் திசநாயகத்திற்கு, இலங்கை நீதி்மன்றம் கடந்த ஆண்டு 20 வருட கடும் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.
இறுதிப் போரின் போது உண்மைக்குப் புறம்பான செய்திகளை அவர் வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தார்.
இலங்கை நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பு ஊடகத் துறையையே அதிர வைத்தது. உலகெங்கும் மனித உரிமை மற்றும் பத்திரிகை அமைப்புகள் இந்த தீர்ப்புக்கு எதிராக குரல் கொடுத்த போதும் இலங்கை அசையவில்லை.
ஆனால் இப்போது தேர்தல் காலம் என்பதால் முடிந்த வழிகளிலெல்லாம் நல்ல பெயர் சம்பாதிக்க முனைகிறது மகிந்த அரசு.
அதன் ஒரு பகுதியாகவே திசநாயகம் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை ஏற்றுக் கொண்டு ரூ 50 ஆயிரம் பிணையில் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் இறையான்மைக்கு எதிரான கட்டுரைகள் எழுதியது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நிதி திரட்டியது போன்ற குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டிருந்தன.












Click it and Unblock the Notifications