'சிலிக்கான் வேலி' வரிசையில் 'சோலார் வேலி'-பிரதமர்

Subscribe to Oneindia Tamil

Manmohan Singh
டெல்லி: இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி எட்டுத்திக்கும் பரவியதைப்போல, சூரிய எரிசக்தித் துறை பரவலாக வேண்டும். 'சிலிக்கான் வேலி' வரிசையில் 'சோலார் வேலி'க்கள் உருவாகவேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

சூரிய எரிசக்தி திட்டங்களை இந்தியாவில் பரவலாக்க மத்திய அரசு, 'ஜவஹர்லால் நேரு தேசிய சூர்யசக்தி- சோலார் இந்தியா' என்ற புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது. புவிவெப்ப பிரச்னையை எதிர்கொள்ள இந்தியா உருவாக்கியுள்ள எட்டு அம்ச செயல்திட்டத்தில் ஒரு பகுதியே இந்த புதிய திட்டம்.

இந்தியாவின் நீண்ட கால எரிசக்தித் தேவையை கருத்தில் கொண்டு சூரிய எரிசக்தியை பரவலாக்குவதோடு, தூய்மையான சுற்றுச்சூழலுக்கும் உத்தரவாதம் அளிக்கும் வகையில் இப்புதிய திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் குறித்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் பரூக்அப்துல்லா கூறுகையில், 'சோலார் இந்தியா திட்டம் பிரதானமாக மூன்று கட்டங்களில் அமல்படுத்தப்படும்.

இதன்படி, 2022ம் ஆண்டில் 13 ஐந்தாண்டு திட்டம் நிறைவு பெறும் நிலையில் இந்தியா 20 ஆயிரம் மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்டதாக இருக்கும்.

சூரிய எரிசக்தித் துறையில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள், கண்டுபிடிப்புகள், பயிற்சிகள் ஆகியவற்றுக்கு இத்திட்டம் உறுதுணையாக இருக்கும்.

மேலும், சூரிய எரிசக்தித் துறையில் முதலீடுகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும், பரிந்துரைகளும் செயல்வடிவம் பெற இத்திட்டம் உதவும்' என்றார்.

'சோலார் இந்தியா' திட்டத்தை இன்று டெல்லியில் துவக்கிவைத்து பிரதமர் மன்மோகன் பேசுகையில், 'இந்தியாவில் நாலாப்புறங்களில் தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களை பரவலாக்கிய சிலிக்கான் வேலிக்கள் வரிசையில் சோலார் வேலியை உருவாக்கவேண்டும்.

இதுபோன்று உருவாக்கப்படும் மையங்களில், சூரிய எரிசக்தி விஞ்ஞானம், பொறியல் தொழில்நுட்பம், ஆராய்ச்சி, உற்பத்தி என பல மட்டங்களிலும் பணிகள் நடைபெற வேண்டும்.

சூரிய எரிசக்தித் துறையை ஒரு மிகப் பெரிய தொழில்வாய்ப்பு நிறைந்த துறையாக இந்திய நிறுவனங்கள் கருதவேண்டும்.

இந்தியா அணுசக்தி, விண்வெளி மற்றும் தகவல்தொழில்நுட்பத் துறைகளில் சர்வதேச தரத்தை எட்டியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக சூரிய எரிசக்தித் துறையில் இந்தியா சர்வதேச முதலிடத்தை பிடிக்கவேண்டும்.

சூரிய எரிசக்தித் துறை வளர்ச்சியடைந்தால், சூரிய சக்தி விளக்குகள், சூரிய சக்தி பம்புகள் போன்ற சாதனங்கள் அதிகளவில் பயன்பாட்டுக்கு வந்து இந்திய கிராமங்களின் முகமே முற்றிலுமாக மாறிவிடும்' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+