விரைவில் வருகிறது விழுப்புரம்-திருச்சி மின் ரயில்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: விழுப்புரம்-திருச்சி இடையே விரைவில் மின்சார ரயில் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே இணையமைச்சர் அகமது தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருச்சியில் அமைச்சர் செய்தியாளார்களிடம் கூறியதாவது: ரயில்வே பட்ஜெட்டில் அறிவித்தபடி, அனைத்து ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது நடைபெற்று வரும் ரயில்வே பணிகளும் விரைவுபடுத்தப்பட்டு உள்ளது.

விழுப்புரம் - திருச்சி இடையே அகலப் பாதையை மின்மயமாக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. மின்சார ரயில் இயக்கும் துவக்க விழா தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

விழுப்புரம் - திண்டுக்கல் இடையிலான இரட்டைவழி ரயில்பாதை அமைக்கும் பணி, ஆரம்ப கட்ட நிலையில் உள்ளது.

அரியலூர் - வாளாடி மற்றும் திருச்சி - திண்டுக்கல் இடையேயான பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு விரைவாக நடந்து வருகின்றன. இப்பணிகள் 24 மாதங்களில் நிறைவடையும்.

விழுப்புரம் - வேலூர் அகல ரயில்பாதை திட்டம், இரண்டு மாதங்களில் நிறைவடையும்.

கரூர் - சேலம் புதிய அகல ரயில்பாதை அமைக்கும் பணியில் சேலத்திலிருந்து நாமக்கல் வரையிலான பணி அடுத்த ஆண்டும், நாமக்கல்லிருந்து - கரூர் வரையிலான பணி 2012ம் ஆண்டும் நிறைவடையும்.

தஞ்சாவூர் - அரியலூர் மார்க்கத்தில் புதிய ரயில் பாதை அமைப்பதற்கான நிலம் சர்வே முடிந்து, ரயில்வே கமிஷனுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+