தமிழகத்தில் மேலும் 90 உழவர் சந்தைகள் திறப்பு- அமைச்சர்
நெல்லை தமிழகத்தில் புதிதாக மேலும் 90 உழவர் சந்தைகள் திறக்கப்படும் என அமைச்சர் மைதீன்கான் தெரிவித்துள்ளார்.
நெல்லை, பாளை. மகாராஜா நகர் உழவர் சந்தையில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை கார்ப்பரேஷன் வங்கி, நெல்லை கிளை சார்பில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் கிராம மேம்பாட்டு திட்டம் துவக்க விழா நடந்தது.
விழாவுக்கு தலைமை வகித்து சபாநாயகர் ஆவுடையப்பன் பேசுகையில்,
உழவர் சந்தைகள் மூலம் பொதுமக்களும், விவசாயிகளும் பயன்பெற்று வருகின்றனர். உழவர் சந்தைகள் திறக்கப்பட்டுள்ளதன் மூலம் விவசாயிகளின் விலை பொருட்களுக்கு தகுந்த விலை கிடைப்பதுடன், பொதுமக்களுக்கும் குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்கிறது என்றார்.
விழாவை துவக்கி வைத்து அமைச்சர் மைதீன்கான் பேசியதாவது,
தமிழக முதல்வரின் கனவு திட்டம்தான் உழவர் சந்தை. கடந்த 96ம் ஆண்டு இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் 145 உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆட்சியில் இந்த திட்டத்துக்கு மூடுவிழா நடத்தப்பட்டது.
முதல்வர் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் உழவர் சந்தைகள் புத்துயிர் பெற்றன. தமிழகத்தில் 90 உழவர் சந்தைகள் புதிதாக திறக்க திட்டமிடப்பட்டது. இதில் 45 உழவர் சந்தைகளின் பணிகள் முடிந்து திறந்து வைக்கப்பட்டு வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications